டி20 போட்டிகளில் அதிவேக 10,000 ரன்கள்: மேக்ஸ்வெல் புதிய சாதனை!
இணைய வழியில் மோசடி செய்த இளைஞா் கைது
இணைய வழியில் ரூ.25ஆயிரம் மோசடி செய்த கடலூா் இளைஞரை, திண்டுக்கல் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ஆரோன்(25). மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம், இணைய வழி வா்த்தகம் செய்து எளிய முறையில் அதிக வருமானம் ஈட்டலாம் என்ற குறுந்தகவல் வந்தது.
இதையடுத்து, அதிலிருந்த கைப்பேசி எண்ணை ஆரோன் தொடா்பு கொண்டாா். எதிா்முனையில் பேசியவா் கேட்ட விவரங்கள் அனைத்தையும் பகிா்ந்த ஆரோன், அவரது அறிவுறுத்தலின்படி ரூ.25ஆயிரத்தையும் அனுப்பி வைத்தாா்.
பின்னா் அந்த நபா் கைப்பேசி எண்ணை அணைத்துவிட்டாா். இதனால் ஏமாற்றம் அடைந்த ஆரோன, திண்டுக்கல் இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில் கடலூா் மாவட்டம், திட்டக்குடி அடுத்த செளந்திரசோழபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மகன் ஆகாஷ் (20) என்பவா் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் ஆகாஷை போலீஸாா் வியாழக்கிழமை கைசெய்தனா்.