"வாக்குச் செலுத்தப் பனையூர் வர வேண்டுமா?" - விஜய்யை விமர்சித்த சீமான்
இதற்காகவெல்லாம் உங்கள் தாம்பத்திய இன்பத்தை இழக்காதீர்கள்! | காமத்துக்கு மரியாதை -263
''மிகவும் சின்ன விஷயமாக இருக்கும். ஆனால், மனம் விட்டுப் பேசாததால் கணவன் - மனைவிக்கு இடையே அது மிகப்பெரிய பிரச்னையாக மாறி நிற்கும்.
அப்படியொரு பிரச்னையுடன் தான் அந்த தம்பதியினர் என்னை சந்திக்க வந்திருந்தார்கள். கணவர், 'எங்களோட செக்ஸுவல் லைஃப் திருப்தியா இல்ல' என்றார். மனைவியோ, 'இவர் எனக்கு துரோகம் பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு' என்றார். இருவரிடமும் தனித்தனியாக பேசினேன்'' என்றபடி, பேச ஆரம்பித்தார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

''கணவர், 'எங்களோட செக்ஸுவல் லைஃப் திருப்தியா இல்ல' என்று சொன்னதற்கு, பல மனைவிகள் தயங்குகிற 'நியூட் செக்ஸ்'தான் காரணம். 'எங்களுக்குள்ள செக்ஸ் நடக்குது. ஆனா, அதுல ஒரு முழுமையே இல்ல. அவங்க தன்னை ரொம்ப மறைச்சி மறைச்சி வெச்சுக்கிறாங்க. ஆர்கசம் கிடைக்குது. ஆனா, என் மனைவி எப்படி இருப்பாங்கன்னு நான் முழுமையா பார்த்ததே இல்ல' என்று வருத்தப்பட்டார்.
அந்தக் காலத்தில், கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தபோது இந்தக் காரணத்தால், பல கணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தனிக்குடித்தனம் அல்லது தங்களுக்கென தனியாக ஒரு படுக்கையறை கொண்ட வாழ்க்கை முறை வந்தப் பிறகு, இந்தப் பிரச்னை பெரும்பாலும் குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியும் ஒருசிலருடைய செக்ஸுவல் லைஃபில் இந்தப் பிரச்னை இருக்கிறது என்றால், அதற்கு வேறு ஏதேனும் தான் காரணமாக இருக்க வேண்டும்.
அடுத்து அவருடைய மனைவியிடம் பேசினேன். மற்றப் பெண்களைவிட தன்னுடைய மார்பக அளவு சிறியதாக இருக்கிறது என்கிற தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இருந்தார். அதனால்தான், நியூட் செக்ஸுக்கு அவர் மறுத்தே வந்திருக்கிறார். கணவர் அதற்கு முயற்சி செய்தாலும், அவருடைய கையை தட்டி விடுவது; தன்னுடைய கைகளால் உடலை மறைத்துக்கொள்வது என்று இருந்திருக்கிறார். இந்தக் காரணத்தால்தான், 'கணவர் வேறு யாருடனாவது உறவு வைத்துக்கொள்வாரோ' என்கிற பயத்தில் 'இவர் எனக்கு துரோகம் பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு' என்று சொல்லியிருக்கிறார்.
இருவருடைய பிரச்னைகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கவுன்சலிங் கொடுத்தேன். அளவு ஒரு விஷயமே கிடையாது. உன் மேல் எனக்கு இருக்கிற காதலை மட்டும் பார். என்னுடைய ஆசைகளை உன்னைத் தவிர வேறு யாரிடம் நான் கேட்க முடியும்? உன்னிடத்தில் இன்னொரு பெண்ணை நான் கனவிலும் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று கணவர் தன் மனைவியிடம் தன்னைப் புரிய வைத்தார். அந்தப் பெண்ணின் முகத்திலும் ஒரு தெளிவு வந்தது.
இந்தப் பெண்ணைப்போலவே ஆண்களும் தங்கள் உறுப்பின் அளவு குறித்த தாழ்வு மனப்பான்மையால் திருமணத்தையோ அல்லது தாம்பத்திய உறவையோ தவிர்த்து வருவார்கள். இதுவும் அவசியமே இல்லாததுதான். ஒரு கவுன்சலிங் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுதல் மூலமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடித்துவிட முடியும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.














