செய்திகள் :

இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் அதிமுகவினர் அல்ல: இபிஎஸ்

post image

அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ. அரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதற்கு கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. இரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன், அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ. அரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை திமுக அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கைது

இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் அதிமுகவினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ. அரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தம... மேலும் பார்க்க

இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்

சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் ... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவு... மேலும் பார்க்க

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டைச் சே... மேலும் பார்க்க

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்... மேலும் பார்க்க

ஹிந்தியில் கட்டுரைப் போட்டி நடத்தும் ரயில்வே! சு. வெங்கடேசன் கண்டனம்!!

பயணங்கள் தொடர்பான கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ள ரயில்வே, ஹந்தியில்தான் கட்டுரை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே, பயணங்கள் தொடர்பான ஒரு கட்டுரைப் போ... மேலும் பார்க்க