செய்திகள் :

'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்

post image

தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடந்து வருவது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பவதாவது...

"தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025 - 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

அன்பில் மகேஸ் பெருமிதம்
அன்பில் மகேஸ் பெருமிதம்

சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப் பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும் விஜய்!

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒரு தனித்தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஓர் அறிக்கைய... மேலும் பார்க்க

``அடுத்து வருபவர்கள் நல்லா பண்ணுவார்கள் தலைவா!" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால... மேலும் பார்க்க

நித்தியானந்தா: பழங்குடிகளின் நிலம் பறிப்பா? பொலிவியாவில் 20 கைலாசாவாசிகள் நாடு கடத்தல்; பின்னணி?

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்ற தகவல் உறுதியாகத் தெரியவில்லை.ஆனால், அவரது சமூக வலைத்தள பக்கங்களில் மட்டும் பதிவுகள், போட்டோக்கள், வீடியோக்கள் தினமும் பதிவாகி வ... மேலும் பார்க்க

மணிப்பூர்: 'பிரச்னையை விவாதிக்க நடுராத்திரி 2 மணியா?' - மக்களவையில் கனிமொழி அடுக்கிய கேள்விகள்

2023-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, மணிப்பூரில் கலவரங்கள் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், இன்னமும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆளும் பாஜக அரசு என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது... அத்தனை கலவரங்களும... மேலும் பார்க்க

'திருக்குறளும், இந்தி பாடலும்' நிர்மலா சீதாராமன் Vs திருச்சி சிவா - மாநிலங்களவையில் சுவாரஸ்ய விவாதம்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை எதிர்ப்பு குறித்த கடுமையான விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் திமுக எம்... மேலும் பார்க்க

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய பாலிடிக்ஸ்

கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். முன்னதாக, அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க-வுக்கு நான்கு இடங்கள் கிடை... மேலும் பார்க்க