செய்திகள் :

இந்தியரா இவர்? உலக ரசிகர்களைக் கிறங்கடிக்கும் ஹனுமன்கைண்ட்!

post image

ஹிப்ஹாப் இசைக்கலைஞரான ஹனுமன்கைண்ட் வெளியிட்ட புதிய ஹிப்ஹாப் பாடல் ஹிட் அடித்துள்ளது.

உலகம் முழுவதும் ராப் இசைக்கென கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். பெரும்பாலும் ஆங்கில பாடல் வரிகளில் உருவாகும் இந்தப் பாடல்களைக் கேட்க இந்தியா போன்ற நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழிலும் ஆத்திச்சூடி, போர்க்களம் (ஆடுகளம்), உள்ளிட்டவை ராப் பாடல்களாக உருவானவையே. ஆனால், இவை அசல் ராப் பாடல்கள் எனச் சொல்ல முடியாது. ராப் இசையைத் தொடர்ந்து கேட்கும் ரசிகர்கள் இதிலுள்ள சிக்கல்களையும் கவனிப்பதால் சினிமாவில் உருவாகும் ராப் பாடல்கள் பெரிதாகக் கவனம் பெறுவதில்லை.

இவற்றில், சினிமாவைத் தாண்டி கேளிக்கை விடுதிகள், இசைக்கச்சேரிகளில் பாடும் சுயாதீன ராப் இசைக்கலைஞர்களும் உண்டு.

இதையும் படிக்க: ரசிகரை அடித்த பிரபல நடிகை!

அப்படி, கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த சூரஜ் சேருகத் என்பவர் ஹனுமன்கைண்ட் (hanumankind) என்கிற பெயரில் ஹிப்ஹாப் பாடகராக இருக்கிறார். (ஹனுமன்கைண்ட் என்றால், தன் கலாச்சாரத்தின் பலத்தை வெளிப்படுத்த கடவுள் ஹனுமனையும், எல்லாரும் சமம்தான் என அன்பைக் குறிக்க hanuman kind ஆக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்.)

இவரே எழுதி, இசையமைத்து, பாடி ஆல்பங்களை வெளியிடுவார். யூடியூப்பில் இவரது பாடல்களைப் பலரும் கவனித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் ஹனுமன்கைண்ட் தன் பிக் டாக்ஸ் (bigdawgs) என்கிற ஹிப்ஹாப் ஆல்பத்தை வெளியிட்டார். இவரே எழுதி, இசையமைத்து, பாடி, நடனமாடிய இப்பாடல் உலகளவில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உருவான இப்பாடல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்தவர்களைப் பெரிதாக ஈர்த்ததால் மிகப்பெரிய பிரபல வெளிச்சத்திற்குள் சென்றார். அண்மையில், வெளியான ரைஃபில் கிளஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிக்க: ரெட்ரோ டிரைலர் எப்போது?

இந்த நிலையில், தற்போது ஹனுமன்கைண்ட் ரன் இட் அப் (Run it up) என்கிற புதிய ஹிப்ஹாப் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். கேரள பண்பாட்டு பின்னணியில் உருவான இப்பாடல் உலகளவில் பல நாட்டு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.

பலரும் ஆச்சரியமாக, ’இந்தியாவிலிருந்து இப்படி ஒரு ராப்பரா?’, ‘இந்தியா தனது ஹிப்ஹாப் இதயத்தைக் கண்டடைந்துவிட்டது ‘ என வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இப்பாடலை யூடியூப்பில் இதுவரை 77 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

புதிய தோற்றத்தில் நகுல்!

நடிகர் நகுல் புதிய தோற்றத்திலிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நகுல் சில ஆண்டுகள் இடைவெளிவிட்டு உடல் எடையைக் குறைத்து, காதலில் விழுந்தேன் படத்தின் மூலம்... மேலும் பார்க்க

விரைவில் முடிகிறது ரோஜா -2 தொடர்!

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ரோஜா 2 தொடர் விரைவில் முடியவுள்ளது. தொடர் முடியவுள்ள தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பார்க்க

நோன்பிருந்தும் சிறப்பாக விளையாடி வரலாற்றுச் சாதனை படைத்த 17 வயது வீரர்..!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இளம் வீரர் (17) லாமின் யமல் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் பார்சிலோனா அணி பென்பிகாவை 3-1 என வெ... மேலும் பார்க்க

பாக்கியலட்சுமி, அய்யனார் துணை தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பாக்கியலட்சுமி, அய்யனார் துணை தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டு... மேலும் பார்க்க

விடாமுயற்சி வசூலைக் கடந்த டிராகன்?

விடாமுயற்சி திரைப்படத்தின் வசூலை டிராகன் முறியடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்குகள... மேலும் பார்க்க

இயக்குநராகும் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். நடிகர் ஜெயம் ரவி தன் பெயரை ரவி மோகனாக மாற்றியபின் காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பை... மேலும் பார்க்க