செய்திகள் :

"இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்" - பிரதமர் மோடி

post image

பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க முன்னிலையில் இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையேயான சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

பிரதமர் மோடி - இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க
பிரதமர் மோடி - இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க

அதன் பிறகுச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மோடி, "இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக மற்றும் நெருக்கமான உறவுகள் உள்ளன.

இலங்கை பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் உள்ள மூன்று கோயில்களைச் சீரமைக்க இந்தியா உதவும்.

இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதனைத் தொடர்ந்து பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க, "இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், எந்த செயலும் இந்த மண்ணில் நடக்காது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்பு நெருக்கமானது.

டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்தியா ரூ.300 கோடி நிதி தந்ததற்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

''இவ்வளவு கொடுத்தும், போதவில்லை என அழுகிறார்கள்'' - ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் மோடி மறைமுக தாக்கு!

பாம்பன் கடல் மீது கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகை தந்தார். இதற்கான விழாவில் பங்கேற்ற அவர், ''அன்பு தமிழக சொந்தங்களுக்கு வ... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டு மண்ணில் நின்று பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும்!'- ஸ்டாலின் கோரிக்கை என்ன?

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தலைமையேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது நாடாளுமன்ற தொ... மேலும் பார்க்க

புதிய பாம்பன் தூக்கு பாலத்தைத் திறந்துவைத்து மோடி; சிறிது நேரத்தில் ஏற்பட்ட பழுது... என்ன நடந்தது?

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு புதிய பாம்பன் பாலத்தைத் திறந்துவைப்பதற்காக இன்று மதியம் 12:30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார... மேலும் பார்க்க

புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ - அதிர்ச்சி கொடுக்கும் திமுக

புதுச்சேரியில் கடந்த 2021-ல் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகளைத் தவிர... மேலும் பார்க்க

CPIM: புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி; அகில இந்திய மாநாட்டில் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரகாஷ் காரத், எம்.ஏ.பேபிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது ம... மேலும் பார்க்க

`சவாலுக்குத் தயாரா?' - நீட் தேர்வு விவகாரம், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க