பாமக உழவர் மாநாடு: 'நீரா பானம்; ஆக்கிரமிப்பு ஏரிகளை மீட்க தனி வாரியம்' - நிறைவேற...
இந்தியாவில் குறைந்துவரும் ஒட்டகங்கள்! உயர் அதிகாரி எச்சரிக்கை!
இந்தியாவில் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்.
பாலைவனத்தின் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீண்ட காலத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாலவனத்தில் கடும் வெயிலில்கூட பயணிக்கும் திறன் வாய்ந்தவை. பாலைவனத்தில் இருக்கும் இன்னல்களை சமாளிப்பதற்கு ஏற்றார் போல் அதன் உடலமைப்பு இயற்கையாகவே அமைந்திருக்கும்.
அனல் பறக்கும் பாலைவனத்தில் பயணிக்கும்போது தண்ணீரை அதன் உடலில் சேகரித்து வைத்து தேவைப்படும்போது குடித்துக்கொள்ளும், இயற்கையாக அதற்கு அமைக்கப்பெற்ற கூடுதல் இமைகள் மணல்புயல்களின் போது அதன் கண்களை பாதுகாக்கும்.
அதன் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு ஐ.நா. இந்த ஆண்டு (2024) உலக ஒட்டக இமை வருடமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவிலுள்ள ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாகவும் அதனால் பாரம்பரிய ஒட்டக பராமரிப்பாளர்களை ஆதரித்து இந்தியாவிலுள்ள ஒட்டகங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கால்நடை மற்றும் பால்வளத் துறை செயலாளர் அல்கா உபாத்யாயா எச்சரித்துள்ளார்.
இதையும் படிக்க: மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு சிறை!
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒட்டகப்பால் உற்பத்தி குறித்த தேசிய முகாமில் பேசிய அவர், கால்நடைகள் மேயும் நிலத்தை பாதுகாக்கவும், அதனை வளர்த்து பராமரிக்கும் மக்களை ஆதரிப்பதிலும் தேசிய கால்நடைத் திட்டம் முக்கிய பங்காற்றிவருவதாக அவர் தெரிவித்தார்.
சுமார் 150 கால்நடை பராமரிப்பாளர்கள் மற்றும் ஒட்டகப்பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்ற அந்த முகாமில் பண்ணை வளர்ப்பு மற்றும் பால்வளத்தை மேம்படுத்தும் முறைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
மேலும், அந்த முகாமில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒட்டகப் படையினரும் பங்கேற்றுக்கொண்டனர்.
இந்த முகாமில் ஒட்டகப் பந்தயமும், ஒட்டக அலங்காரப் போட்டியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.