செய்திகள் :

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

post image

இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி திங்கள்கிழமை மாலை தில்லி வந்தடைந்தார்.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வாங் யி பேசவுள்ளார்.

அதன்பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலை செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சந்தித்து எல்லை விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறாா். அதைத்தொடா்ந்து மாலை 5.30 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஆக. 31, செப்.1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க பிரதமா் மோடி சீனா செல்வாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உறவை வலுப்படுத்தும் முயற்சி!

கல்வான் பள்ளத்தாக்கில் 2020-இல் இந்திய-சீன படைகளிடையே மோதல் ஏற்பட்ட பின் 5 ஆண்டுகளாக இருநாடுகளிடையேயான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் தொடா்ச்சியான முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நிகழாண்டு கைலாசம்-மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. இருநாடுகளிடையேயான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, இந்திய-சீன எல்லை விவகாரங்கள் தொடா்பான இருதரப்பு சிறப்பு பிரதிநிதிகளின் 23-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் அஜீத் தோவல் பங்கேற்றிருந்தாா். இதைத்தொடா்ந்து, தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யீ, 24-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவுள்ளாா்.

Chinese Foreign Minister Wang Yi arrived in Delhi on Monday evening for a two-day visit.

இதையும் படிக்க : டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

சுபான்ஷு சுக்லாவை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் ஈட்ட முற்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா விமர்சித்துள்ளார். ராஜீவ் சுக்லா பேசியதாவது: “தேர்தல் ஆணையத்துக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும். பி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் குறித்து கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, சுக்லாவை பாராட்டினார்.சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்ம... மேலும் பார்க்க

3-ஆவது திருமணத்துக்குப் பின் காதலனுடன் ஓடிய இளம்பெண்: பேத்தியைக் கொன்று வீசிய தாத்தா - பாட்டி!

3-ஆவது திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் அதன்பின் தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் 6 வயது மகளை, பெண்ணின் பெற்றோர் கொன்று வீசிய கொட... மேலும் பார்க்க

‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் மகன் விமர்சனம்

பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல் நிலவுவதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் விமர்சித்துள்ளார். ‘எமர்ஜென்ஸி காலத்தைவிட மோசமான சூழல் இப்போது நாட்டில் நிலவுகிறது’ என்று ராஷ்திரிய ஜனத... மேலும் பார்க்க

சுங்கச் சாவடியில் ராணுவ வீரரை கட்டி வைத்து அடித்த இளைஞர்கள்! 6 பேர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியில் ஏற்பட்ட தகராறு காரணமாக ராணுவ வீரரை அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விடியோ இணையத்தில் பலர... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

ஒடிஸா முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஆக. 18) விடியோ வெளியிட்டுள்ளார். சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையி... மேலும் பார்க்க