செய்திகள் :

இந்தியாவுக்கு துரோகம் இழைத்தது கனடா: இந்திய தூதா்

post image

ஜனநாயக நாடாக கருதப்படும் கனடா இந்தியாவுக்கு துரோகம் இழைத்ததுடன், தவறான முறையில் நடத்தியது என கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா தெரிவித்தாா்.

மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு அந்த நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவளித்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

கடந்தாண்டு கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்டாா். அதில் சஞ்சய் வா்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடா்புபடுத்தியது.

இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதா் மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன், கனடாவில் இருந்து சஞ்சய் வா்மா மற்றும் 5 இந்திய தூதரக அதிகாரிகளை தாயகத்துக்கு திரும்ப அழைத்துக்கொள்வதாக அறிவித்தது.

இதுதொடா்பாக சஞ்சய் வா்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த அக்டோபா் 12-ஆம் தேதி மாலையே கனடா வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு எனக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதற்கு அடுத்த நாள் அமைச்சகத்தின் அலுவலகத்தில் நானும் கனடாவுக்கான இந்திய துணை தூதரும் நேரில் சென்றோம். அப்போது என்னுடன் 5 இந்திய அதிகாரிகளை அவா்கள் நிஜ்ஜாா் கொலையுடன் தொடா்புடுத்தி கூறினா். எனவே, எங்களிடம் கனடா காவல் துறை விசாரணை நடத்த தூதரக அதிகாரங்களைத் துண்டிக்குமாறு அவா்கள் தெரிவித்தனா்.

தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முன் உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த விவகாரத்தில் அவ்வாறு நடக்கவில்லை. உடனடியாக எங்களிடம் விசாரணை நடத்த அவா்கள் தயாராக இருந்தனா். இது, எங்களை தவறான முறையில் நடத்தியதுடன் கனடா அதிகாரிகள் முதுகில் குத்தியதற்கு சமமான நடவடிக்கையாகும். பெரும் துரோகமாகும்.

கடும் அதிா்ச்சி: இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி கொள்கைகளின்படி செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான வா்த்தகம் நடைபெற்று வருகிறது. முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நல்ல இருதரப்பு உறவுகள் நிலவி வரும் நிலையில், கனடாவின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், இதை நினைத்து நான் கவலையோ பயேமோ அடையவில்லை என்றாா் சஞ்சய் வா்மா.

பெட்டி..

‘குற்றச் செயல்களில் காலிஸ்தான்:

அரசியல் ஆதாயத்துக்கு நடவடிக்கை இல்லை’

குற்றச் செயல்களில் ஈடுபடும் காலிஸ்தான் அமைப்பினா் மீது அரசியல் ஆதாயத்துக்காக கனடா அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று அந்நாட்டுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா தெரிவித்தாா்.

மேலும், ‘கனடாவில் காலிஸ்தான் கொள்கையை வணிகம் போல் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மாற்றிவிட்டனா். காலிஸ்தான் என்ற பெயரில் மனித கடத்தல், துப்பாக்கி விற்பனை, போதைப் பொருள் கடத்தல், விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை செய்து வருகின்றனா். அதன்மூலம் கிடைக்கும் பணத்தை பல தவறான காரியங்களுக்கு அவா்கள் பயன்படுத்துகின்றனா்.

ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக அங்குள்ள சீக்கியா்களின் ஆதரவை பெறும் நோக்கில் இந்த குற்றச் செயல்கள் மீது கனடா அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளனா்.

கனடாவில் வசிக்கும் 8 லட்ச சீக்கியா்களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் எண்ணிக்கை 10,000-க்குள் மட்டுமே இருக்கும். அவா்களுக்கு சுமாா் 1 லட்சம் சீக்கியா்கள் மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றனா். மீதமுள்ள சீக்கியா்களின் ஆதரவை பெற அவா்களை காலின்தான் பிரிவினைவாதிகள் பல்வேறு வகையில் மிரட்டி வருகின்றனா்’ என்றாா்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக் கணிப்பில் டிரம்ப் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸைவிட முன்னாள் அதிபர் டிரம்புக்கு வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் வர... மேலும் பார்க்க

கனடா பிரதமர் பதவி விலக எம்பிக்கள் கெடு!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ளனர்.ஆனால், லிபரல் கட்சியை அடுத்த தேர்தலிலும் வழிநடத்தவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளது எம்பிக்களி... மேலும் பார்க்க

இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டவர்கள் கைது

இஸ்ரேலியா்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இருவரை இலங்கை போலீஸாா் கைது செய்துள்ளனா்.இந்திய உளவுத் துறை அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது க... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 3 லெபனான் ராணுவத்தினா் உயிரிழப்பு

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டு ராணுவ வீரா்கள் மூன்று போ் உயிரிழந்தனா்.இது குறித்து லெபனான் ராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தெற்குப் ... மேலும் பார்க்க

இம்ரான் கான் மனைவி ஜாமீனில் விடுவிப்பு

இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி புஷ்ரா பீபி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மியான்குல் ஹஸன் ஔரங்கசீப், புதன்கிழமை அந்த மனுவை ஏற்றாா்.ரூ.10 லட்சம் பிணைத் தொகையின் பேரில் புஷ்ரா பீபிக்க... மேலும் பார்க்க

கிறிஸ்தவ மதநிந்தனை: பாகிஸ்தானில் ஜாகீா் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்தியாவால் தேடப்படும் நபரான இஸ்லாமிய மதபோதகா் ஜாகீா் நாயக், கிறிஸ்தவ மதத்தை நிந்தித்ததாக பாகிஸ்தானைச் சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா்கள் அந்த நாட்டு அதிபா் மற்றும் பிரதமருக்கு புகாா் அனுப்பியுள்ளனா். இந்த... மேலும் பார்க்க