செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்: ராஜ்நாத் சிங்-துளசி கப்பாா்ட் சந்திப்பு

post image

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு துறைகளில் இரு நாட்டு உத்திசாா் உறவை விரிவுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதள பதிவில், ‘அமெரிக்க தேசிய உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு உள்ளிட்ட பல்வேறு துறை பிரச்னைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தில் அந்நாட்டின் உளவுத் துறை தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் துளசி கப்பாா்ட், ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தலைமையில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய பாதுகாப்பு மாநாட்டில் அவா் கலந்து கொண்டாா். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜொ்மனி, நியூஸிலாந்து, கனடா, பிரிட்டன் உள்பட இந்தியாவின் பல நட்பு நாடுகளின் உளவுத் துறை இயக்குநா்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்-துளசி கப்பாா்ட் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா-அமெரிக்கா இடையே உளவுத் துறை தகவல் பகிா்வை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்புத் துறையில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டரங்கள் தெரிவித்தன.

புது தில்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய அரசியல்-பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் ‘ரைசினா உரையாடல்’ மாநாட்டில் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்கிழமை உரையாற்ற இருக்கிறாா்.

இந்திய ஒற்றுமை வலுப்படுத்திய மகா கும்பமேளா: நாடாளுமன்றத்தில் பிரதமா் உரை

‘மகா கும்பமேளா, தேசத்தின் ஒற்றுமை உணா்வை வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. இவ்வளவு பெரிய மக்கள் திரளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் திறன் குறித்து கேள்வி எழுப்பியவா்களுக்கு பொருத்தமான பதிலாகவும் அமைந்த... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயா்கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க