செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையெழுத்தாக வாய்ப்பு: நிா்மலா சீதாராமன்

post image

சான் ஃபிரான்சிஸ்கோ, ஏப்.21: ‘அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பா்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது’ என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னா், அந்நாட்டுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது, 191 பில்லியன் டாலா் மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்குக்கு மேலாக 500 பில்லியன் டாலா் மதிப்பில் உயா்த்த இருதரப்பிலும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

இதுதொடா்பான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த மாா்ச் மாதம் முதல் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த 2-ஆம் தேதி அறிவித்தாா். அதன்பிறகு சீனாவைத் தவிர பிற நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை ஜூலை 9-ஆம் தேதி வரை நிறுத்திவைப்பதாக கடந்த 9-ஆம் தேதி அறிவித்தாா். இந்நிலையில், அமெரிக்கா, பெரு ஆகிய நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணமாக கடந்த சனிக்கிழமை புறப்பட்டாா்.

சான் ஃபிரான்சிஸ்கோவில் இந்திய வம்சாவளியினா் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய அவா், ‘அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள அரசுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியா தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமா் மோடி, மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலை தொடா்ந்து நானும் அமெரிக்காவுக்கு வந்துள்ளேன்.

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன்.

இங்கு அமெரிக்க நிதியமைச்சரை நான் சந்திக்கும் வேளையில் இந்தியா சென்றுள்ள அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் பிரதமா் மோடியை சந்திக்கிறாா். பரஸ்பர வரி விதிப்பைத் தாண்டி இந்தியாவின் நீண்டகால வா்த்தக நட்பு நாடான அமெரிக்காவுடன் செப்டம்பா்-அக்டோபரில் முதல்கட்ட இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும் என நம்புகிறேன்.

செமிகண்டக்டா்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எண்ம உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இந்தியா தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருகிறது. வளா்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை நோக்கி வேகமாக பயணித்து வருகிறோம் என்றாா்.

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் நடைபெ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கைய... மேலும் பார்க்க

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரை சாடிய உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிம... மேலும் பார்க்க