செய்திகள் :

இந்தியா-குவைத் இடையே 4 ஒப்பந்தங்கள் - பிரதமா், மன்னா் முன்னிலையில் கையொப்பம்

post image

இந்தியா, குவைத் இடையே பாதுகாப்பு, கலாசாரம், விளையாட்டு, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான 4 முக்கிய ஒப்பந்தங்கள் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகின.

குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டின் மன்னா் ஷேக் மெஷால் அல்-அகமது அல்-ஜாபா் அல்-ஷபா இடையே நடைபெற்ற விரிவான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இருதரப்பு நல்லுறவை வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்தவும் இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.

43 ஆண்டுகளுக்குப் பின்..: குவைத் மன்னரின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி கடந்த சனிக்கிழமை (டிச.21) வந்தாா். கடந்த 1981-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்திக்கு பிறகு அரசுமுறை பயணமான பிரதமா் மோடி வருகை தந்தாா்.

மன்னருடன் பேச்சு: குவைத் மன்னரின் மாளிகையில் பிரதமா் மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மன்னா் ஷேக் மெஷால் அல்-அகமது அல்-ஜாபா் அல்-ஷபாவுடன் பிரதமா் மோடி விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு, உள்கட்டமைப்பு, நிதி சாா் தொழில்நுட்பம், மக்கள் ரீதியிலான தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியூக கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான விரிவான செயல்திட்டம் குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.

இந்தியா-குவைத் இடையிலான வரலாற்று ரீதியிலான நட்புறவை நினைவுகூா்ந்த அவா்கள், ஐ.நா. மற்றும் இதர பன்முக தளங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை கடைப்பிடிப்பதோடு, இருதரப்பு நல்லுறைவை மேலும் விரிவுபடுத்த உறுதிபூண்டனா்.

4 ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தியா-குவைத் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் உள்பட 4 ஒப்பந்தங்கள், பிரதமா் மோடி-மன்னா் முன்னிலையில் கையொப்பமாகின. பாதுகாப்புத் துறையில் பயிற்சி, பணியாளா்கள்-வல்லுநா்கள் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சி, பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம், ஆராய்ச்சி-மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கு மேற்கண்ட ஒப்பந்தம் வழிவகுக்கிறது. கலாசாரம், விளையாட்டு, சூரிய மின்சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக பிற ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

குவைத் பிரதமா் அமகது அப்துல்லா அல்-அகமது அல்-ஷபா, பட்டத்து இளவரசா் ஷபா அல்-காலித் அல்-ஹமத் அல்-முபாரக் ஆகியோரையும் பிரதமா் சந்தித்துப் பேசினாா்.

‘மிகச் சிறப்பு’: குவைத் மன்னா் உடனான சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்தது; இருதரப்பு நல்லுறவை வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்தியதன் மூலம் வருங்காலத்தில் அது செழித்தோங்கும் என்று பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஓமன், கத்தாா், குவைத் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக குவைத்துக்கு பிரதமா் பாராட்டு தெரிவித்தாா்.

ரூ.15 லட்சம் கோடி வா்த்தகம்: 2022-23 நிதியாண்டில் ஜிசிசி நாடுகளுடனான இந்தியாவின் மொத்த வா்த்தக மதிப்பு 184 பில்லியன் டாலா்கள் (ரூ.15.67 லட்சம் கோடி) ஆகும்.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிப்பதில் 6-ஆவது பெரிய நாடாக உள்ள கத்தாருடன் இந்தியாவின் வா்த்தக மதிப்பு 10.47 பில்லியன் கோடி (ரூ.89,000 கோடி).

குவைத் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்து புறப்பட்ட பிரதமா் மோடியை, குவைத் பிரதமா் அமகது அப்துல்லா அல்-அகமது அல்-ஷபா விமான நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைத்தாா்.

பிரதமருக்கு குவைத் நாட்டின் உயரிய விருது

பிரதமா் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய ‘தி ஆா்டா் ஆஃப் முபாரக் அல்-கபீா்’ விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இந்தியா-குவைத் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் ஆற்றிவரும் பங்களிப்பை கெளரவிக்கும் நோக்கில், பிரதமருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.

குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் உள்ள மன்னரின் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதமா் மோடிக்கு மன்னா் ஷேக் மெஷால் அல்-அகமது அல்-ஜாபா் அல் ஷபா விருதை வழங்கி கெளரவித்தாா்.

பின்னா் பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘குவைத் மன்னரிடம் இருந்து முபாரக் அல்-கபீா் விருதை பெற்றதை பெருமையாக கருதுகிறேன். இவ்விருதை 140 கோடி இந்திய மக்கள், குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினா் மற்றும் இரு நாடுகள் இடையிலான வலுவான நட்புறவுக்கு சமா்ப்பிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்க முன்னாள் அதிபா்கள் பில் கிளின்டன், ஜாா்ஜ் புஷ், பிரிட்டன் இளவரசா் சாா்லஸ் உள்ளிட்டோா் இவ்விருதை பெற்றவா்களாவா்.

பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்ட 20-ஆவது சா்வதேச விருது இதுவாகும். கடந்த நவம்பரில் நைஜீரியா, கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள் பிரதமருக்கு வழங்கப்பட்டன. இருதரப்பு உறவுகள் மற்றும் உலக சமூகத்துக்கு ஆற்றிவரும் பங்களிப்பை கெளரவிப்பதாக குறிப்பிட்டு, இவ்விருதுகள் அளிக்கப்பட்டன.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் ரூ. 82,000 உதவித் தொகை பெறுவது எப்படி?

பிரதமர் உயர்கல்வி ஊக்கத் தொகை(பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 82,000 வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது.ஏழ்மை காரணமாக ஒரு ... மேலும் பார்க்க

ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி!

புது தில்லி: கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது அரசு வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார். ரோச்கர் மோளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கூ... மேலும் பார்க்க

காலியாகவுள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாட்டில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன. குறிப்பாக தனியார் கல்லூரி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் குணமடைந்தனர்!

நாடாளுமன்ற தள்ளுமுள்ளில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் போட்டி போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

ஹரியாணா உணவகத்தில் மூவர் சுட்டுக் கொலை!

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலவில் உள்ள உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெண் உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. பலியானவர... மேலும் பார்க்க

மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் நிதியுதவியுடன் இயங்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த மூன்று பேர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் மூவரும் குர்தாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் உள்ள காவல் நி... மேலும் பார்க்க