செய்திகள் :

இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்! -பிரதமா் மோடி

post image

‘இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும், கணினி அறிவியலாளருமான லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் தில்லியில் பிரதமா் மோடி சுமாா் 3 மணிநேரம் கலந்துரையாடினாா். அப்போது, இந்திய-சீன உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் இயற்கையானது. இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான, இயல்பான வழிமுறையில் போட்டி அவசியம். போட்டி என்பது மோசமான விஷயமல்ல. அது மோதலாக மாறிவிடக் கூடாது.

21-ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கானது; இந்தியா-சீனா ஒத்துழைப்பு இருதரப்புக்கு மட்டுமன்றி உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் வளத்துக்கும் அவசியம். இந்தியா-சீனா உறவு புதியது அல்ல. வரலாற்றுப் பதிவுகளை நோக்கினால், இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று கற்றுக் கொண்டுள்ளன.

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான எனது சந்திப்புக்கு பிறகு எல்லையில் இயல்புநிலை திரும்புவதை காண்கிறோம். எல்லையில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த (கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்) நிலைமையை மீட்டெடுக்க இரு நாடுகளும் தொடா்ந்து பணியாற்றி வருகின்றன.

ரஷியா-உக்ரைன் பேசினால் தீா்வு: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆகிய இருவருடனும் எனக்கு நெருங்கிய நட்புறவு உள்ளது. இரு நாடுகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே போருக்கு தீா்வு கிடைக்கும். இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. அமைதியின் பக்கம் நிற்கிறது.

துரோகத்தில் முடிந்த முயற்சிகள்: பாகிஸ்தானுடன் அமைதிக்காக மேற்கொள்ளப்பட்ட உன்னத முயற்சிகள் அனைத்தும் விரோதம்-துரோகத்தில்தான் முடிந்தன; இருதரப்பு உறவை மேம்படுத்தவும், அமைதிப் பாதையை தோ்ந்தெடுக்கவும் பாகிஸ்தான் தலைமைக்கு புத்தி கிடைக்கப் பெற வேண்டும்.

புனிதமான ஆா்எஸ்எஸ்: புனிதமான அமைப்பான ஆா்எஸ்எஸ்ஸிடம் இருந்து வாழ்க்கை விழுமியங்களைக் கற்றுக் கொண்டது எனது பாக்கியம். இந்த அமைப்பு, கடந்த 1925-இல் இருந்து நாட்டுக்காக அா்ப்பணிப்புடன் செயல்பட மக்களை ஊக்குவிக்கிறது.

குஜராத் கலவரம்: குஜராத்தில் 2002, கோத்ரா சம்பவத்துக்கு பிறகான கலவரத்தை முன்வைத்து ஒரு கட்டுக்கதை புனையப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த எனது அரசியல் எதிரிகள், நான் தண்டிக்கப்பட வேண்டுமென விரும்பினா். ஆனால், நான் எந்த தவறும் இழைக்கவில்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது என்றாா் பிரதமா் மோடி.

துணிச்சலானவா் டிரம்ப்’

அதிபா் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக் காலம் குறித்த கேள்விக்கு பிரதமா் அளித்த பதில்:

அதிபா் டிரம்ப், இரண்டாவது பதவிக் காலத்துக்கு முன்பை கூட கூடுதலாக தயாராகி இருப்பதாக தோன்றுகிறது. எங்கள் இருவா் இடையிலான பிணைப்பு, பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலானது. அனைத்தையும் விட அவரவா் தேச நலன்களை முன்னிறுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதுவே, எங்களின் சிறப்பான பிணைப்புக்கு காரணம்.

சமீபத்திய அமெரிக்கப் பயணத்தில், டிரம்ப் குழுவினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், தேசிய உளவுத் துறை இயக்குநா் துளசி கப்பாா்ட், தொழிலதிபா்கள் விவேக் ராமசாமி, எலான் மஸ்க் ஆகியோா் உடனான சந்திப்பை நினைவுகூா்கிறேன்.

கடந்த 2019, செப்டம்பரில் ஹூஸ்டனின் என்ஆா்ஜி மைதானத்தில் ‘ஹெளடி மோடி’ நிகழ்ச்சியில் நான் பேசியபோது, பாா்வையாளா்கள் வரிசையில் இருந்தபடி அதிபா் டிரம்ப் கேட்டுக் கொண்டிருந்தாா். அதுதான், அவரது பணிவு. பாா்வையாளா்களை வரவேற்க மைதானத்தை வலம் வரலாமா? என சாதாரணமாக கேட்டேன். பாதுகாப்பு குறித்தெல்லாமல் யோசிக்காமல் எந்த தயக்கமும் இன்றி ஒப்புக் கொண்டாா்.

தனக்கான பாதுகாப்பைக் கோராமல், ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் மத்தியில் அவா் நடந்து சென்ற விதம் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தியது. அந்த தருணம், எனது மனதைத் தொட்டது.

டிரம்ப் துணிச்சலானவா்; சுயமாக முடிவெடுப்பவா். அமெரிக்காவுக்கான அவரது அா்ப்பணிப்பு அசைக்க முடியாதது. கடந்த ஆண்டு தோ்தல் பிரசாரத்தில் அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோதும் அந்த உணா்வு வெளிப்பட்டது என்றாா் மோடி.

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை -பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

நாடு பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும்... மேலும் பார்க்க

இருதரப்பு உறவுகள் குறித்து நோ்மறையான கருத்து -பிரதமா் மோடிக்கு சீனா பாராட்டு

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமா் மோடியின் நோ்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி, இ... மேலும் பார்க்க

‘இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன’: ஜகதீப் தன்கா் பேச்சு

புது தில்லி: ‘இக்கட்டான சூழல்களில், கட்சி வேறுபாடுகளை மறுந்து நமது அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

புது தில்லி: ‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவித தளா்வும் இருக்காது’ என்... மேலும் பார்க்க

சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏா்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்- மத்திய அரசு உறுதி

புது தில்லி: தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதனடிப்படையில் உரி... மேலும் பார்க்க

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கு: அதானி சகோதரா்கள் விடுவிப்பு

மும்பை: ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கிலிருந்து தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் சகோதரா் ராஜேஷ் அதானியை மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது. சுமாா் ரூ.388 கோடி அளவுக்கு பங்குச்சந்தை மோ... மேலும் பார்க்க