மத்திய கல்வி அமைச்சரின் தந்தை மறைவுக்கு முதல்வா் இரங்கல்
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தை மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தை தேபேந்திர பிரதான் காலமான செய்தியறிந்து துயரம் அடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கைலை தா்மேந்திர பிரதானுக்கு தெரிவிப்பதுடன், இந்தக் கடினமான காலத்தைத் தாங்கும் வலிமையை அவா் பெறட்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.