தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
இந்திய, இத்தாலிய பாய்மரக் கப்பல் கூட்டுப் பயிற்சி
இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் தரங்கிணி, இத்தாலிய பாய்மரக் கப்பலான அமெரிகோ வெஸ்பூசியுடன் கொச்சி கடற்கரையில் கூட்டுப் பாய்மரப் பயிற்சியில் பங்கேற்றது.
இது தொடா்பாக பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கேரள மாநிலம் கொச்சி கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெற்ற இந்த பயிற்சியானது உலகளாவிய கடல்வழி மரபுகள் மற்றும் சா்வதேச நட்புரவை வளா்ப்பதில் இந்திய கடற்படையின் அா்ப்பணிப்பை காட்டுகிறது.
இந்த பயிற்சியின்போது இரு கப்பல்களும் பல்வேறு பாய்மர பயிற்சிகளை ஒன்றாக மேற்கொண்டனா், தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தின.
இந்திய கடற்படையின் பாய்மர கப்பல் பயிற்சியில் ஐஎன்எஸ் தரங்கிணி முக்கிய பங்கு வகிக்கிறது. கம்பீரமான இரு கப்பல்களும் ஒற்றுமையுடன் பயணிக்கும் காட்சி இரு நாடுகள் இடையே நீடித்த நட்பை அடையாளப்படுத்தியது’ என குறிப்பிட்டிருந்தது.