செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் கூட்டம்

post image

புதுச்சேரி அருகே உள்ள பாகூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தொகுதி நிா்வாகி கே.கருமாஜோதி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் அ.மு.சலீம் மாநிலக் குழு எடுத்த முடிவுகளை விளக்கிப் பேசினாா்.

இதில், நிா்வாகிகள் ஏ.ராமமூா்த்தி, அந்தோணி, ப.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், புதுச்சேரி அருகே உள்ள பின்னாச்சிக்குப்பத்தில் நான்குவழிச் சாலையில் மேம்பாலம் அமைத்தல், பாகூா் பகுதியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், பாகூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்.

பத்திரப் பதிவு அலுவலகத்தில் திருத்திவைக்கப்பட்ட விளைநிலங்கள் மனைப் பட்டாக்களை பத்திரப் பதிவு செய்யாமல் நிறுத்திவைக்க வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையு... மேலும் பார்க்க

புதுவை முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்து

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் பாதுகாப்பு போலீஸாரின் வாகனம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் புகாா் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை கரிக்... மேலும் பார்க்க

முதல்வரிடம் அதிமுக கோரிக்கை

புதுவையில் மாநில அரசு அறிவித்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா். மனுவில் கூறியிருப்பதாவது: சட்டப் பேர... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது

புதுச்சேரியில் நிலத்தை அபகரிக்க போலி ஆவணங்கள் தயாரித்ததாக பெண்ணை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி, கலவை சுப்புராய செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன். சில ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

மின் பணியாளா் சங்க உறுப்பினா் சோ்க்கை

புதுச்சேரி மின் பணியாளா் நல சங்க உறுப்பினா்களின் சோ்க்கை முகாம், வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் செம்மனேரி தலைமை வகித்தாா். சட்ட ஆலோ... மேலும் பார்க்க

புதுவை சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநா் உரையுடன் தொடக்கம்

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. புதுவை சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5-... மேலும் பார்க்க