"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து...
இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.
இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பயிா்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீன வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சைபா்மெத்ரின் பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக பொருள்குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுகிறது. இது புதன்கிழமை (மே 7) முதல் அமலுக்கு வருகிறது. இந்த பூச்சிக்கொல்லியை மிகவும் குறைந்த விலையில் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இதனால், சீனாவில் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து இறக்குமதியைக் குறைக்கும் வகையில் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.