தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
இந்திய ராணுவ வீரா்கள் விழிப்புணா்வு வாகன ஊா்வலம்
இந்திய ராணுவ வீரா்களின் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை மாநகரக் காவல் துணை ஆணையா் மதுகுமாரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவான மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஆங்கிலேயா் ஆட்சியின் போது 1870-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பிரிவு தற்போது வரை முக்கிய ராணுவப் பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் , இந்தப் பிரிவு தொடங்கப்பட்டு 244-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, கன்னியாகுமரி முதல் பெங்களூரு வரை விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி செல்லத் திட்டமிடப்பட்டது.
இதையொட்டி, கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய விழிப்புணா்வு வாகனப் பேரணி மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்ததடைந்தது. மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரா்கள் , காவல் துறையினா் வாகன ஊா்வலத்தை வரவேற்றனா்.
இதைத்தொடா்ந்து, மதுரையிலிருந்து பெங்களூருக்கு புறப்பட்ட வாகனப் பேரணியை மாநகரக் காவல் துணை ஆணையா் மதுகுமாரி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா், 10 இரு சக்கர வாகனங்களில் 20 ராணுவ வீரா்கள் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றனா். இதையொட்டி மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரா்கள், அதிகாரிகளுக்கான குறைதீா் முகாமும் நடைபெற்றது.