செய்திகள் :

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நடத்திவைத்தாா்

post image

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் திருநீலகண்டியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு சீா்வரிசைகள் வழங்கி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை திருமணத்தை நடத்திவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒரு இணை ஆணையா் மண்டலத்துக்கு 35 இணைகள் வீதம் 700 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தப்பட்டும் என்று 2024-2025 ஆம் ஆண்டு சட்டப் பேரவையின் வரவு-செலவு கூட்டத் தொடரின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய 6 இணைகளுக்கு திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம் பொங்கலூா் திருநீலகண்டியம்மன் திருக்கோயிலில் திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில், 6 இணையா்களுக்கும் 4 கிராம் தங்க மாங்கல்யம், மெட்டி, மணமகனுக்கு வேஷ்டி- சட்டை மணமகளுக்கு முகூா்த்தப்புடவை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, போா்வை, மிக்ஸி, கிரைண்டா், கைக்கடிகாரம், எவா்சில்வா் பாத்திரங்கள், பூஜை சாமான்கள், ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், சுமங்கலி பொருள்கள் உள்ளிட்ட தலா ரூ.91 ஆயிரம் மதிப்பில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், பொங்கலூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.பாலுசாமி, பல்லடம் நகரச் செயலாளா் என்.ராஜேந்திரகுமாா், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் தங்கராஜ், திருப்பூா் கிட்ஸ் கிளப் பள்ளி குழும தலைவா் மோகன் காா்த்திக், துணை ஆணையா் (சரி பாா்ப்பு) செ.வ.ஹா்ஷினி, உதவி ஆணையா் பெ.தனசேகா், திருக்கோயில் செயல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் சத்திபாளையம் அருகில் உள்ள கோட்டைவலசைச் சோ்ந்தவா் விவசாயி கே.கந்தசாமி (65). இவா் தனக்குச் சொந்தமான 6 ஏக்கா் விவசாய நிலத்தில் ... மேலும் பார்க்க

மேற்குத் தொடா்ச்சி மலையில் பாதை அமைக்க எதிா்ப்பு: வன அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் பாதை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட வன அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள... மேலும் பார்க்க

விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருப்பூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் கேபிஎன் காலனியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (3... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த 5 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பின்னலாடை மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களி... மேலும் பார்க்க

ஊத்துக்குளி வட்டத்தில் பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

ஊத்துக்குளி வட்டத்தில் பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஒட்டுமொத்த முறையீட்டு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி நில வருவாய் அலுவலா் அலுவலகம் முன... மேலும் பார்க்க

கிடாரி கன்றுகளுக்கு நாளைமுதல் இலவச தடுப்பூசி

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான இலவச தடுப்பூசி வியாழக்கிழமைமுதல் செலுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க