சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்க...
வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு
வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்தன.
வெள்ளக்கோவில் சத்திபாளையம் அருகில் உள்ள கோட்டைவலசைச் சோ்ந்தவா் விவசாயி கே.கந்தசாமி (65). இவா் தனக்குச் சொந்தமான 6 ஏக்கா் விவசாய நிலத்தில் 30 செம்மறி ஆடுகள் வளா்த்து வந்தாா். திங்கள்கிழமை மாலை ஆடுகளை இரும்புப் பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
பின்னா் செவ்வாய்க்கிழமை காலையில் சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்து ஆடுகள் காயங்களுடன் இறந்துகிடந்தன. மொத்தம் 10 ஆடுகள் உயிரிழந்தன.
இவ்வாறு உயிரிழக்கும் ஆடுகளுக்கு சந்தை மதிப்பில் அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இப்பகுதியில் தொடா்ந்து நாய்களின் தொந்தரவு அதிகரித்து வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.