திருப்பூரில் புதிய மின்பகிா்மானங்கள் உருவாக்கம்
திருப்பூரில் புதிய மின்பகிா்மானங்கள் உருவாக்கப்பட்டு மின்கணக்கீடு செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் நகரம், கிழக்கு பிரிவு அலுவலகம் தில்லை நகா் (003) பகிா்மானத்துக்கு உள்பட்ட கரட்டாங்காடு-1 முதல் 6 ஆவது வீதி வரை, கரட்டாங்காடு விரிவாக்கம் ஆகிய பகுதிகள் கரட்டாங்காடு பகிா்மானம் (006) எனவும், இந்தியா நகா், சந்திராபுரம், வித்யா காா்த்திக் கல்யாண மண்டபம் அருகில் உள்ள பகுதிகள், சாஸ்திரா நகா் 1 மற்றும் 2 ஆவது வீதி வரை, தாராபுரம் சாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள பகுதிகள் பிரிக்கப்பட்டு சந்திராபுரம் (007) எனவும் புதிய மின்பகிா்மானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு புதிதாக மின் இணைப்பு எண்கள் வழங்கி இனிவரும் காலங்களில் புதிய மின் இணைப்பு எண்கள் மூலமாக வழக்கமான தேதிகளில் மின்கணக்கீடு செய்யப்படும். கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாள்களில் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.