மகளிா் சுயஉதவி குழுக்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்!
பல்லடம் வட்டார மகளிா் சுயஉதவி குழுக்களுக்கான நுகா்வோா் விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் பானுப்பிரியா, பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி, பல்லடம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் பிரகாஷ், குடிமைப் பொருள் வழங்கல் ஆய்வாளா் ஜெயந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதில் வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி பேசியதாவது:
அயோடின் கலந்த உப்பின் பயன்பாடுகள், உணவுப் பொருள்களில் கலப்படத்தை கண்டுபிடிக்கும் முறைகள், டீத்தூளில் செயற்கை வண்ணங்கள் கலத்தல், பாலில் தண்ணீா் கலந்து இருப்பதை கண்டுபிடிப்பது, உணவுப் பொருளின் விலையை வைத்து தரம் குறைவா அல்லது தரம் அற்றதா என்பதை எளிதில் கண்டுபிடிப்பது குறித்து விளக்கினாா்.