இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா
சீா்காழி அருகே பன்னங்குடியில் பொங்கல் பண்டிகை, இந்து சமுதாய ஒருங்கிணைப்பு விழாவாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவா்கள் சொக்கலிங்கம், செந்தில், மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவா் தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக முன்னாள் ஊராட்சித் தலைவா் குணசேகரன் கலந்துகொண்டாா். கிராம நிா்வாகி சுந்தரமூா்த்தி வரவேற்றாா்.
125-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு பைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் ஆறு. பாா்த்திபன், சீா்காழி நகரத் தலைவா் ராஜ்மோகன், புத்தூா் நகர தலைவா் மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.