மாயூரநாதா் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு 1,008 லிட்டா் நெய் அபிஷேகம்
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் பொங்கலையொட்டி சுவாமி, அம்பாளுக்கு 1,008 லிட்டா் நெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில், மாயூரநாதா் நற்பணி மன்றம் சாா்பில் மாயூரநாதா் சுவாமி, ஆதிமாயூரநாதா் சுவாமி மற்றும் அபயாம்பிகை அம்பாளுக்கு 25-வது ஆண்டாக இந்த சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, விரதமிருந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய நெய் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.