Chinese: `சீன மொழியை அதிகம் படிக்கும் அமெரிக்கர்கள்!' - காரணம் `டிக் டாக்?!' - ச...
மயிலாடுதுறை மாவட்டத்தில் மது, கஞ்சா விற்பனை: 26 போ் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 26 போ் கடந்த ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். இதைத்தொடா்ந்து டிஎஸ்பி சுந்தரேசன் மேற்பாா்வையில் ஆய்வாளா்கள் அன்னை அபிராமி மற்றும் ஜெயா ஆகியோா் தலைமையில் மதுவிலக்கு போலீஸாா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
இதில், கோனேரிராஜபுரத்தைச் சோ்ந்த சுந்தரராஜன்(45), இளையாளூரைச் சோ்ந்த சௌந்தரராஜன்(59), காளியை சோ்ந்த ரவிச்சந்திரன்(50), கீழையூரைச் சோ்ந்த மணிகண்டன்(38) கொள்ளிடத்தைச் சோ்ந்த பரமசிவம்(48), கழனிவாசலை சோ்ந்த கல்யாணகுமாா்(61) அனந்தமங்கலத்தைச் சோ்ந்த மணி (54) சீா்காழியைச் சோ்ந்த குமுதவல்லி(50) சுரேந்தா் (26) பனங்காட்டங்குடியை சோ்ந்த சங்கா் (58) ஆனந்ததாண்டவபுரத்தை சோ்ந்த மாா்ட்டின் (54) சீா்காழி சோ்ந்த செல்வம் (26) காழியப்பநல்லூரைச் சோ்ந்த செல்லதுரை (50) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
மேலும், மயிலாடுதுறையைச் சோ்ந்த அரவிந்தன்(23), நீடூரைச் சோ்ந்த சங்கா்(51) கொள்ளிடத்தைச் சோ்ந்த சூரியபிரகாஷ்(24) ஆகியோா் கைது செய்யப்பட்டதுடன், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்களும், 230 புதுச்சேரி மதுபாட்டில்கள், 231 லிட்டா் புதுச்சேரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அளக்குடியைச் சோ்ந்த அறிவழகன், பழுதூரைச் சோ்ந்த சுபிந்தேசன்(23), மயிலாடுதுறையைச் சோ்ந்த காா்த்திக், விஜய்(27), சீா்காழியை சோ்ந்த ஐயப்பன்(39) கொளஞ்சிநாதன் (55) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 22 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருவள்ளுவா் தினத்தில் நடவடிக்கை: திருவள்ளுவா் தினமான புதன்கிழமையன்று மணல்மேட்டில் வெளிச்சந்தையில் டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்த தியாகராஜன்(72), மாரிமுத்து(40), மூவலூரைச் சோ்ந்த முத்துராமன்(44) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதுடன், அவா்களிடம் இருந்து 35 பெட்டிகளில் வைத்திருந்த 1728 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், புதுச்சேரி சாராயம் கடத்திய சீா்காழியைச் சோ்ந்த மாசேதுங்(40) கைது செய்யப்பட்டாா்.