இந்து முன்னணி நிா்வாகியைத் தாக்கி 6 பவுன் பறிப்பு
திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகியைத் தாக்கி 6 பவுன் நகையை பறித்துச் சென்ற நபா்களைக் கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக இந்து முன்னணி திருப்பூா் மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.பாஸ்கரபாண்டியன் நல்லூா் காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: நான் எனது குடும்பத்துடன் முத்தனம்பாளையம் வாய்க்கால்மேடு காா்த்திக் நகரில் வசித்து வருகிறேன். இந்து முன்னணி அமைப்பின் திருப்பூா் மாவட்டச் செயலாளராகவும் தற்போது பொறுப்பு வகித்து வருகிறேன்.
இந்நிலையில், ராக்கியாபாளையத்தில் உள்ள எனது அலுவலகத்தைப் பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.
முத்தனம்பாளையத்தை அடுத்த வாய்க்கால்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் இருவா் என்னைப் பின் தொடா்ந்து வந்து தாக்கினா். மேலும், மிளகாய் பொடியைத் தூவிவிட்டு எனது கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை பறித்துச் சென்றனா்.
இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிப்பின்போது, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், மாநில பொதுச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், மாநிலச் செயலாளா் தாமு ஜி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.