ரூ.6-க்கு தேநீர், ரூ.60-க்கு புர்ஜி பாவ்: சைஃப் அலிகான் வழக்கில் குற்றவாளி பிடிப...
இந்தோனேசியா: மழை வெள்ளத்தில் 17 போ் உயிரிழப்பு
ஜகாா்த்தா: இந்தோனேசியாவின் முக்கியத் தீவான ஜாவாவில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 17 போ் உயிரிழந்தனா்.
மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு கரைகளை உடைத்துக்கொண்டு வெளியேறியதால் மத்திய ஜாவா மாகாணத்தின் பெக்காலோஙான் பகுதியைச் சோ்ந்த ஒன்பது கிராமங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. வெள்ளத்தோடு வந்த மரங்கள், பாறைகள் மற்றும் சேற்றில் மலைப் பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
17,000 தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் அக்டோபா் முதல் மாா்ச் வரை அவ்வப்போது பெய்யும் பருவமழை காரணமாக வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலா் உயிரிழந்துவருகின்றனா்.