செய்திகள் :

’இந்த ஆண்டில் காளைக்கு... அடுத்த ஆண்டிலிருந்து வீரருக்கும் கார் பரிசு!’ - செந்தில் பாலாஜி அறிவிப்பு

post image

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே இராசாண்டார் திருமலையில் (ஆர்.டி.மலை ) காணும் பொங்கலையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்பட்ட 729 காளைகள் பங்கேற்று விளையாடின. 380 காளையர்கள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அந்த காளைகளை அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மாடுகள் முட்டியதில் 16 வீரர்கள் உட்பட 63 பேர் காயமடைந்தனர். அதேபோல், இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த சிலர் பாதுகாப்பு வேலிகளை கடந்து, மைதானத்திற்குள் செல்லமுயன்றவர்களும், காளைகள் வெளியேறும் பகுதியில் சுற்றித்திரிந்தவர்களும் காயமுற்றதாக போலீஸ் தரப்பினர் தெரிவித்தனர் மேலும், இதில் காயமடைந்த 12 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், திருச்சி மாவட்டம், குழுமணி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் குழந்தைவேல் (வயது 67) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு விழா

போட்டியில், சிறப்பாக களம் கண்ட மதுரை செக்கான் ஊரணியைச் சேர்ந்த கதிரவன் காளை முதல் பரிசாக காரை பெற்றது. பரிசினை தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த பரிசுக்குரிய கார் சாவியை வழங்கினார். இரண்டாவதாக கரூர் ஆர்.டி.மலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் காளைக்கு பிரிட்ஜ் வழங்கப்பட்டது. 21 காளைகள் பிடித்து நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் முதல் பரிசான இருசக்கர வாகனத்தை பெற்றுக்கொண்டார். அதேபோல், திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த சுதர்சன் என்பவர் 17 காளை பிடித்து இரண்டாம் பரிசு பெற்றார். முதல்முறையாக இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பரிசளிப்பு விழாவுக்கு பிறகு, “வெற்றிப்பெற்ற காளைக்கு மட்டுமல்லாது, காளையர்களுக்கும், தமிழக முதலமைச்சர் சார்பில் வரும் ஆண்டு முதல் பரிசாக கார் வழங்கப்படும்“ என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

காணும் பொங்கலை கொண்டாட வண்டலூர் பூங்காவில் குவிந்த மக்கள் | Photo Album

வண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டல... மேலும் பார்க்க

நீலகிரி: குல தெய்வத் திருவிழா... நடனமாடி கொண்டாடிய கோத்தர் பழங்குடியின மக்கள்! | Photo Album

காேத்தர் பழங்குடியின மக்களின் குலதெய்வ திருவிழாகாேத்தர் பழங்குடியின மக்களின் குலதெய்வ திருவிழாகாேத்தர் பழங்குடியின மக்களின் குலதெய்வ திருவிழாகாேத்தர் பழங்குடியின மக்களின் குலதெய்வ திருவிழாகாேத்தர் பழங... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் அசத்திய இவரை நினைவிருக்கிறதா? - மீண்டும் தன்னை நிரூபித்த அபி சித்தர்!

அனல் பறக்க நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிகமான மாடுகளை பிடித்து அபி சித்தர் முதலிடம் பிடித்து சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை பெற்றார்.பரிசு பெற்றபோதுஉலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக... மேலும் பார்க்க