இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
மேஷராசி அன்பர்களே!
பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது.
அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும் என்பதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.
வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் சற்று பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 4,7
அதிர்ஷ்ட எண்கள்: 4,6
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே
ரிஷப ராசி அன்பர்களே!
எதிர்பார்த்ததை விடவும் பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தியாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடை பெறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட நாள்: 5, 8
அதிர்ஷ்ட எண்கள்: 5,7
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே
மிதுன ராசி அன்பர்களே!
பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது. செலவுகளும் அதிகரிக்கும். உஷ்ணத்தால் உடல் நலன் பாதிக்கப்படக்கூடும். உடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும்.சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிக ளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகளை சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 4,8
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6,9
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண் செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கம் துயரம் இல்லையே
கடகராசி அன்பர்களே!
பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு கொண்டாடுவார்கள். திருமண முயற்சி கள் சாதகமாக முடியும். வழக்குகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. கண்களில் சிறிய அளவில் பிரச்னை ஏற்படக்கூடும்.
அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 3,6
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: நடராஜப்பெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
சிம்ம ராசி அன்பர்களே!
தேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை.
அதிர்ஷ்ட நாள்கள்: 6, 9
அதிர்ஷ்ட எண்கள்: 2,6
சந்திராஷ்டமம்: 2 அதிகாலை முதல் 3,4 காலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
கன்னிராசி அன்பர்களே!
பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணியில் ஸ்திரத் தன்மை உண்டாகும்.
வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம்.
அதிர்ஷ்ட நாள்கள்: 7,9
அதிர்ஷ்ட எண்கள்: 3,7
சந்திராஷ்டமம்: 4 காலை முதல் 5,6 மாலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.