அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: 3 பேர் கைது
அயோத்தியில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் காணாமல் போனதாக பெற்றோா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய கிராமத்துக்கு அருகே உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து அவருடைய உடல் மீட்கப்பட்டதாக போலீஸாா் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
‘எங்களது மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாா். அவருடைய உடலில் ஆழமான காயங்களும், எழும்பு முறிவும் ஏற்பட்டிருந்ததோடு, அவருடைய இரு கண்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன.
சிறைச்சாலையில் கோழிப்பண்ணை! கைதிகளுக்கு கோழிக்கறி! அரசுக்கு ரூ.10 கோடி மிச்சம்!!
இந்த விவகாரத்தில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று அந்த இளம்பெண்ணின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில், மாநிலத்தில் தலித் விரோத ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.