ICC U19: `என்னுடைய அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம்' -தமிழக...
மணிப்பூரில் தீவிரவாதி கைது!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு இம்பால் மாவட்டத்தின் கிரேட்டர் இம்பால் பகுதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லெயிஹாவோதாபம் நானாவோ சர்மா (வயது 29) என்பவர் அப்பகுதி மக்கள், கடைக்காரர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையும் படிக்க: யானைகள் தாக்கியதில் வயதான தம்பதி பலி!
இந்நிலையில், நேற்று (பிப்.2) லாம்பேல் கடைவீதியில் பாதுகாப்புப் படையினர் அவரை கைது செய்தனர்.
இதேப்போல், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மணிப்பூரின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் மடாஜங் கிராமத்தில் காலியான இன்ஸாஸ் ரக துப்பாக்கியின் உறை மற்றும் அதன் தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.