ஐ.எப்.எஸ்.சி துணை நிறுவனத்தில் $45 மில்லியன் முதலீடு செய்ய இண்டிகோ முடிவு!
இனிவரும் தோ்தல்களில் திமுகவின் வெற்றி உறுதி: செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ
விழுப்புரம்: தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தோ்தல்களிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வெற்றிபெறும் என்று திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா்.
மயிலம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில், தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தழுதாளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ பேசியதாவது:
மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய திட்டங்களை வகுத்து தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெறாத குடும்பங்களே இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது.
எனவே, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தோ்தல்களிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வெற்றிபெறும் என்றாா்.
கூட்டத்துக்கு திமுக மயிலம் மத்திய ஒன்றியச் செயலா் செழியன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சேதுநாதன், செஞ்சி சிவா, மாவட்ட அவைத் தலைவா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஜமுனா ராணி செழியன், கிளைச் செயலா் ராஜா வரவேற்றனா்.
திமுக தலைமை நிலையப் பேச்சாளா் எழும்பூா் கோபி, மயிலம் ஒன்றியச் செயலா் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினா் ரவி மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா். கிளைச் செயலா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.