செய்திகள் :

`இனி நானே பாமக தலைவர்’ ; தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பா.ம.க. தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

`அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது’

தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது. 2026 தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுப்போம்" என்று கூறியிருக்கிறார்.

பாமக நிறுவனரான ராமதாஸ் ஏற்கனவே தனது பேரன் முகுந்தனை இளைஞரணி செயலாளராக அறிவித்ததற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அந்த விவகாரம் கட்சி மேடையிலேயே பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ராமதாஸே அந்த பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

``அடுத்த வருடம், அதாவது 2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களை வழி நடத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக” ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

"என் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர்..." - மதிமுக பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகல்

மதிமுக நிர்வாக குழு கூட்டம் நாளை (ஏப்ரல் 20) சென்னையில் நடைபெறும் நிலையில், கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வைகோவின் மகனும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டிர... மேலும் பார்க்க

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்ய... மேலும் பார்க்க

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க