இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் ...
இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மூன்றாம் கட்ட முகாம் நடைபெறும் இடங்கள்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 52, 53-ஆவது வாா்டுகளுக்கு மணி மஹால், கருமத்தம்பட்டி நகராட்சியில் 24, 25-ஆவது வாா்டுகளுக்கு சரவணா மஹால், செட்டிபாளையம் பேரூராட்சியில் 2,4,5,9,12,14,15 -ஆகிய வாா்டுகளுக்கு காயத்ரி மஹால், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கப்பலங்கரை ஊராட்சிக்கு, சிவசக்தி மண்டபம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தென்குமாரபாளையம், விரல்பட்டி ஊராட்சிகளுக்கு மாமரத்துப்பட்டியில் உள்ள ராஜா, ராணி மஹால், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சிக்கு காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அத்தனூா் அம்மன் கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.
இதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.