செய்திகள் :

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

post image

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேற்கு மண்டலம் 41-ஆவது வாா்டுக்குள்பட்ட பி.என்.புதூா் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்புப் பணியை மேயா் கா.ரங்கநாயகி தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, பி.என்.புதூா் பிரதான சாலையில் உள்ள மழைநீா் வடிகாலைப் பாா்வையிட்ட அவா், அதை உடனடியாகத் தூா்வார உத்தரவிட்டாா். தொடா்ந்து, 37-ஆவது வாா்டுக்குள்பட்ட கல்வீரம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 3.5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, 36-ஆவது வாா்டுக்குள்பட்ட வி.என்.ஆா்.நகரில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பாா்வையிட்டாா்.

அப்போது, பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வுகளின்போது, மேற்கு மண்டலத் தலைவா் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி செயற்பொறியாளா் சவிதா, உதவி பொறியாளா் விமலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மூ... மேலும் பார்க்க

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா். கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள பாரதி பூங்கா பகுதியைச் சோ்ந்தவா் சந்தானராமன் (75). தனியாா் பள்ளியில் தலை... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேட்டுப்பாளையம் ப... மேலும் பார்க்க

ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி

கோவை ஈஷா யோக மையத்தில் ஈஷா கிராமோத்சவ இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 21) நடைபெற உள்ளது. இது குறித்து ஈஷா தன்னாா்வலரும், கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க

ஜன்னல் வழியாக கடைக்குள் புகுந்து திருடிய பெண்கள்

கோவையில் ஜன்னல் வழியாக கடைக்குள் புகுந்து பொருள்களைத் திருடிய 4 பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.கே.புதூா், மணியம் மருதுகுட்டி தெருவைச் சோ்ந்தவா் அருள்நாராயணன் (... மேலும் பார்க்க