Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
கல்லூரி மாணவி தற்கொலை
கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சகுந்தலா தேவி (44). இவா்களது மகள் சந்தியா (21). இவா், மலுமிச்சம்பட்டி அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி. (சிஏ) 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் புதன்கிழமை தனியாக இருந்த அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா்,
சந்தியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.