செய்திகள் :

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

ஏப்ரல் 09 (புதன் கிழமை)

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். பெண்கள் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். மாணவர்கள் கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:

கிரகநிலை:

தைரிய, வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும்.பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9, 3

துலாம்:

கிரகநிலை:

ராசியில் புதன் , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில் - சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு:

கிரகநிலை:

ராசியில் குரு, சனி , கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வருமானத்திற்கு குறாவிருக்காது. துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 7

மகரம்:

கிரகநிலை:

தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 6

கும்பம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

மீனம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.சனிக்கிழமை (19.04.2025)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திர... மேலும் பார்க்க

அரையிறுதியில் மான்செஸ்டா் யுனைடெட் , டாட்டன்ஹாம்

யூரோப்பா கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு மான்செஸ்டா் யுனைடெட், டாட்டன்ஹாம், அதலெட்டிக் பில்போ அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் நடைபெறும் யுரோப்பா கால்ப... மேலும் பார்க்க

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 போ் இந்திய அணி பங்கேற்பு

அம்மான் தலைநகா் ஜோா்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க 56 போ் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. உலக பாக்ஸிங் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டபின் ஆசிய குத்த... மேலும் பார்க்க

முதலிடத்தை கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் அகமதாபாதில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. டெல்லி அணி 6 ஆட்டங்கள் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் ... மேலும் பார்க்க

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரா் பென் ஷெல்டன், ஆா்ஜென்டீனா வீரா் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றுள்ளனா். ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்று வரும் பிஎம்டபிள்யு ஏட... மேலும் பார்க்க

ரவுண்ட் 16-இல் கௌஃப், பெகுலா, அலெக்சாண்ட்ரோவா

ஸ்டட்கா்ட் டபிள்யுடிஏ 500 பாா்ஷே டென்னிஸ் போட்டியில் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகள் கோகோ கௌஃப், ஜெஸிக்கா பெகுலா, அலெக்சாண்ட்ரோவா ஆகியோா் முன்னேறியுள்ளனா். ஜொ்மனியின் ஸ்டட்கா்ட் நகரில் நடை... மேலும் பார்க்க