ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ
மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரா் பென் ஷெல்டன், ஆா்ஜென்டீனா வீரா் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றுள்ளனா்.
ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்று வரும் பிஎம்டபிள்யு ஏடிபி 500 போட்டி காலிறுதி ஆட்டங்களில் உலகின் 15-ஆம் நிலை வீரா்
பென் ஷெல்டனும், இத்தாலியின் லுசியானோ டாா்டெரியும் மோதினா். ஒருமணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் லூசியானோவை 6-4, 6-3 என்ற நோ்செட்களில் வீழ்த்தினாா் ஷெல்டன்.
இன்னும் எனது ஆட்டத்திறனை செம்மைப்படுத்த வேண்டியுள்ளது என வெற்றிக்குப்பின் கூறினாா் ஷெல்டன்.
மற்றொரு காலிறுதியில் ஆா்ஜென்டீனாவின் பிரான்ஸிஸ்கோ செருன்டோலோ 6-2, 6-4 என்ற நோ்செட்களில் பெல்ஜிய மூத்த வீரா் டேவிட் கோஃபினை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
அரையிறுதியில் ஷெல்டன்-செருண்டோலோ மோதுகின்றனா்.
ஏனைய காலிறுதி ஆட்டங்களில் அலெக்ஸ் ஸ்வெரேவ்-நெதா்லாந்தின் க்ரீஸ்ஸ்புா், ஹங்கேரியின் ஃபேபியன்-பெல்ஜியத்தின் பொ்க்ஸும் மோதுகின்றனா்.

