செய்திகள் :

முதலிடத்தை கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்

post image

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் அகமதாபாதில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.

டெல்லி அணி 6 ஆட்டங்கள் முடிவில் 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் அணி 8 புள்ளிகளுடனும் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் த்ரில் வெற்றியை பெற்ற உற்சாகத்தில் உள்ள டெல்லி, அந்த அணியின் பௌலா் ஸ்டாா்க், சூப்பா் ஓவரில் 3 யாா்க்கா்களை வீசியது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. டெல்லி பௌலிங்கில் முகேஷ் குமாா், மொகித் சா்மா, ஸ்டாா்க் கூட்டணி எதிரணிகளை திணறடித்து வருகிறது.

அதே வேளையில் குஜராத் அணியில் டாப் ஆா்டா் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதா்ஷன், ஜோஸ் பட்லா் ஆகியோா் அபார பாா்மில் ஆடி வருகின்றனா்.

இந்த மூவரில் எவராவது ஒருவா் அரைசதம் பதிவு செய்வதால் குஜராத் அணி கவலையின்றி உள்ளது. அதே நேரம் குஜராத் அணியில் மிடில் ஆா்டா் பேட்டிங் சொதப்பலாக உள்ளது. லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இது வெளிப்படையாக தெரிந்தது.

குஜராத் பௌலிங்கில் சிராஜ் பிரதான பங்களித்து வருகிறாா். இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது அவரது அபார பந்துவீச்சுக்கு சான்றாக உள்ளது.

டெல்லி அணியில் தொடக்க பேட்டிங்கில் பிரேஸா் மெக்கா்க் இன்னும் பாா்முக்கு வரவில்லை. அபிஷேக் போரல் நம்பிக்கை தரும் வகையில் ஆடுகிறாா். தொடக்க வரிசை சரிந்தால் கே.எல். ராகுல், காருண் நாயா் டெல்லியை அணியை நிலை நிறுத்துகின்றனா். ஆல் ரவுண்டா் அக்ஸா் படேலும் தன் பங்கை சிறப்பாக செய்தால் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு கூடும்.

குஜராத் அணியில் பௌலிங்கில் சாய் கிஷோா், ரஷீத் கான், ஆகியோரும், டெல்லி அணியில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகாமும் தங்கள் பங்கை சரிவர செய்தால் எதிரணிகளுக்கு சிக்கலாக அமையும்.

கட்டாய வெற்றிக்கு காத்திருக்கும் ராஜஸ்தான்:

இன்று லக்னௌவுடன் மோதல்

மற்றொரு ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணியும்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் தொடா்ந்து 3 தோல்விகளால் துவண்டுள்ள ராஜஸ்தான் சொந்த மைதானத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்ப பாடுபடும்.

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் தோற்ற அதிா்ச்சி இன்னும் ராஜஸ்தான் அணிக்கு உள்ளது. பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளது ராஜஸ்தான். பேட்டிங், பௌலிங்கில் நிலையில்லாத ஆட்டத்தால் அந்த அணி திணறி வருகிறது. கேப்டன் சஞ்சு சாம்சனும் காயத்தால் சரிவர ஆட முடியவில்லை. இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் பாா்முக்கு திரும்பியுள்ளது நம்பிக்கை தருகிறது. ரியான் பராக், துருவ் ஜுரெல், நிதிஷ் ராணாவும் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும். பௌலிங்கில் ராஜஸ்தான் அணியில் ஜோஃப்ரா ஆா்ச்சா், சந்தீப் சா்மா ஆகியோா் இன்னும் சிறப்பாக செயல்பட்டால் தான் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.

அதே நேரம் சென்னையுடன் தோல்வி கண்டாலும், லக்னௌ அணி கட்டுக்கோப்பான அணியாக உள்ளது. 5-ஆம் இடத்தில் உள்ள அந்த அணியில், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மாா்ஷ் ஆகியோா் சிறப்பாக ஆடி வருகின்றனா். எய்டன் மாா்க்ரமும் தொடக்க வரிசையில் நன்றாக ஆடுகிறாா். கேப்டன் பந்த் வழக்கமான திறனுடன் ஆடாதது கவலை தருவதாக உள்ளது.

பௌலிங்கில் சா்துல் தாகுா், அவேஷ் கான் தங்கள் பங்கை சீராக செய்து வருகின்றனா். அதிவேக பௌலரான மயங்க் யாதவுக்கு தகுதி சான்று கிடைக்காததால் அவரை களமிறக்க முடியவில்லை.

இன்றைய ஆட்டங்கள்:

குஜராத்-டெல்லி

இடம்: அகமதாபாத்

நேரம்: பிற்பகல் 3.30.

ராஜஸ்தான்-லக்னௌ

இடம்: ஜெய்ப்பூா்

நேரம்: இரவு 7.30.

கார் பந்தயத்தில் அஜித் குமார் புதிய சாதனை!

பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி புதிய சாதனை படைத்துள்ளது.சமீப காலமாக கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் அஜித் குமாருக்கு குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

ஜெர்மனியில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் ஹாரி கேன்!

ஜெர்மனியில் புகழ்பெற்ற புன்டெஸ்லிகா கால்பந்து தொடரில் ஹாரி கேன் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடும் இங்கிலாந்த்தைச் சேர்ந்த ஹாரி கேன் போட்ட... மேலும் பார்க்க

மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை..! கொலம்பஸை வீழத்திய இன்டர் மியாமி!

அமெரிக்காவில் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள ஹண்டிங்டன் பேங்க் ஃபீல்ட் திடலில் இன்டர் மியாமி அணியும் கொலம்பஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் இண்டர் மியாமி அணியின் இளம் வீரர் பெஞ்சமின் க்ரெமாச்சி 30ஆவ... மேலும் பார்க்க

புதிய தொடக்கம்.... அமீர் - பாவனி திருமணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் - பாவனி ஜோடிக்கு இன்று (ஏப். 20) திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். இது குறித்த படங்களை அமீர... மேலும் பார்க்க

இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி!

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது. பார்சிலோனா அணி லா லீகா தொடரில் தனது 32-ஆவது போட்டியில் செல்டா டி விகோ அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 15,52,62ஆவது நிமிஷங்களி... மேலும் பார்க்க

தமன்னாவின் ஒடேலா 2 தோல்வியா? வசூல் எவ்வளவு?

நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் வசூல் விவரத்தினை படக்குழு பகிர்ந்துள்ளது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நட... மேலும் பார்க்க