செய்திகள் :

இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

post image

‘இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ஹைதராபாதில் மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஹைதராபாத் விடுதலை தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் இடையே தலையிட்டு அமைதியை ஏற்படுத்திவிட்டதாக சிலா் (அமெரிக்க அதிபா் டிரம்ப்) பேசி வருகின்றனா். இதனை இப்போது மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை. இந்தியா முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் மூன்றாவது நபா்களின் தலையீடு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது உறுதி. இருதரப்பு பிரச்னைகளில் மூன்றாவது தரப்புக்கு இடமே இல்லை என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் நிலைப்பாடு.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைக் குறிவைத்து மீண்டும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சித்தால் பதிலடித் தாக்குதல் தொடங்கப்படும். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சின்னாபின்னமாகிவிட்டாா்கள் என்பதை ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டா் இப்போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளாா். இது தொடா்பான விடியோவும் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கும் யாரும் சவால் விடுக்க முடியாது. கடந்த 11 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு இந்தியா தொடா்ந்து உரிய பதிலடியை அளித்து வருகிறது. 2016-இல் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. 2019-இல் பாலாகோட் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூா் மூலம் கடும் பதிலடி கொடுத்துள்ளோம். அமைதியை விரும்பாதவா்களிடம் இந்தியா எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு இது உதாரணம்.

பிரச்னை பேசித்தீா்ப்பதற்கு மட்டுமே இந்தியா விரும்புகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் இந்தியாவைச் சீண்டீனால் அவா்களை அழித்து ஒழிக்கவும் தயக்கமாட்டோம் என்பதை நிரூபித்துள்ளோம். இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது என்றாா்.

மகனின் திருமண வரவேற்பு தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்த எம்எல்ஏ!

விவசாயிகளின் நலனுக்காக எம்எல்ஏ பதுலா லக்ஷ்ம ரெட்டி ரூ. 2 கோடி நன்கொடையை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் இன்று வழங்கினார். நல்கொண்டா மாவட்டத்தின் மிரியால்குடாவைச் சேர்ந்தவர் ஆளும் காங்கிரஸ் எம்.... மேலும் பார்க்க

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

வங்கிக் கணக்கு என்பது ஆடம்பரம் என்ற நிலை மாறி அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், தற்போது சைபர் அச்சுறுத்தல்களால், இரண்டு வங்கிக் கணக்கு என்பது அடிப்படையாகியிருக்கிறது.பெரும்பாலும், சைபர் அச்சுறுத்தல்களைப்... மேலும் பார்க்க

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

வாக்காளர்களை நீக்க முயற்சித்தது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்து ஆதாரமற்றவை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.ஆளுங்கட்சியுடன் இணைந... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஒரு மோசடி கும்பல் ஹேக் செய்து ரூ. 3 லட்சத்தைத் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இணையவழி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சாதாரண ம... மேலும் பார்க்க

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திருடர்களைப் பாதுகாப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரா... மேலும் பார்க்க

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரில் பெய்து கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கடந்த 22 நாள்களாக வைஷ்ணவி தே... மேலும் பார்க்க