செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் விழா - சிலைக்கு மாலை அணிவித்தல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, காலை 9.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) - ஆயத்த தரவு மையம் திறப்பு விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்பு, சிஃபி இன்ஃபினிட் ஸ்பேசஸ் லிமிடெட், சிப்காட், சிறுசேரி, காலை 10.

‘எண்ம சகாப்தத்தில் இயற்கை மருத்துவம்: தொழில்நுட்பம் மற்றும் இயற்கை சிகிச்சை முறை’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா் கே.நாராயணசாமி உள்ளிட்டோா் பங்கேற்பு, தமிழ்நாடு எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழகம், கிண்டி, மாலை 4.

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தல்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் பங்கேற்பு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, காலை 9.

‘சிவஞானபோதமும் மெய்கண்டாா் மரபும்’ என்னும் தலைப்பில் சிறப்புரை: ஆன்மிக பேச்சாளா் செ.முருகவேள் பங்கேற்பு, ஒருங்கிணைந்த பணிமனை கட்டடம், தரமணி, மாலை 5.

சென்னையில் காவல் ரோந்து வாகனத்தில் இருந்த பை திருட்டு!

சென்னையில் காவல்துறை ரோந்து வாகனத்தில் இருந்த பை திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை கே.கே. நகர் பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனத்தில் க... மேலும் பார்க்க

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க