பிரதமரின் வருகைக்கு மறுநாளே... மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு எரிப்பு!
'இப்படி நடந்துப்பாங்கனு எதிர்ப்பார்க்கல'- கைக்குலுக்காத இந்திய வீரர்கள் குறித்து பாக் பயிற்சியாளர்
ஆசியக்கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என ஒரு தரப்பும், இந்திய அணி செய்ததுதான் சரி என ஒரு தரப்பும் கூறி வருகிறது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
போட்டி முடிந்ததும் பேட்டிங் முடித்த சூர்யகுமார் யாதவும், ஷிவம் துபேவும் கிரீசிலிருந்து பெவிலியன் நோக்கி திரும்பினர்.
அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அவர்களுக்கு கை கொடுக்க முயன்றனர். ஆனால் அதற்குள்ளாக இருவரும் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் வீரர்களும் பயிற்சியாளரான மைக் ஹெசன் ஆகியோரும் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர்.
அறையை விட்டு வெளியே வராத இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணியினர் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். போட்டி முடிவடைந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார்.
"போட்டி முடிந்தவுடன் நாங்கள் கைக்குலுக்கத் தயாராக இருந்தோம். எங்களுடைய எதிர் அணியினர் இப்படி நடந்துக்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் கைக்குலுக்கச் சென்றபோது அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். போட்டியில் நாங்கள் தோல்வியுற்று இருந்தாலும் நாங்களே கைக்குலுக்க தயாராகத்தான் இருந்தோம்" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.