சென்னையில் விஜய் பிரசாரம்! காவல்துறை அனுமதி கோரி மனு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் பிரசாரம் மேற்கொள்வதற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் திருச்சியில் செப். 13 ஆம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் இறுதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் செப். 27 ஆம் தேதி வட சென்னையிலும் அக். 25 ஆம் தேதி தென் சென்னையிலும் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி காவல்துறையில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட 2 நாள்களில் முல்லை நகர், அகரம், ராயபுரம் புளியந்தோப்பு, கொருக்குபேட்டை, ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு, தி.நகர், எம்ஜிஆர் நகர், சைதாபேட்டை, மயிலாப்பூர், கண்ணகி நகர், ஆலந்தூர், வேளச்சேரி, வில்லிவாக்கம், அயனாவரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய இடங்களில் விஜய் பேசவுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TVK vijay campaign in chennai: Petition to police dept seeking permission from TVK
இதையும் படிக்க |நேனோ பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!