விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
இயக்குநர் சுசீந்திரனின் ’2கே லவ் ஸ்டோரி’... நாளை டிரைலர் வெளியீடு!
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘2கே லவ் ஸ்டோரி திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி'.
புதுமுக நாயகனாக ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | ரூ. 50 கோடி வசூலை நெருங்கிய மத கஜ ராஜா!
இந்தப் படத்தின் படப்பிடிப்பை திட்டமிடப்பட்ட காலகட்டத்திற்கு முன்பே 38 நாட்களில் சுசீந்திரன் முடித்தார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. நடிகர்கள் விஷணு விஷால், சூரி ஆகியோர் டிரைலரை வெளியிடுகின்றனர்.