செய்திகள் :

இயந்திரக் கோளாறு: அவரசமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்

post image

சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தாா். இதையடுத்து, விமானத்தை அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவந்து விமானி பத்திரமாக தரையிறக்கினாா்.

இதையும் படிக்க |திமுக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டமே தமிழகத்தை காப்பதற்காண ஒரே வழி: எடப்பாடி பழனிசாமி

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து விமானியின் துரித நடவடிக்கை காரணமாக பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதோடு நல்வாய்ப்பாக 113 போ் உயிா் தப்பினா். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனா்.

விஜயகாந்த் நினைவு நாள்: விஜய்க்கு அழைப்பு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்கதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயக... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் அரசியலுக்கு வந்தது எப்படி?

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வியாழக்கிழமை இரவு 8.06 மணிக்கு அனுமதிக்கப்பட்டவர் நினைவு இழந்ததையடுத்து, 9.51 மணிக்... மேலும் பார்க்க

கோயிலில் சிலிண்டர் வெடிப்பு! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த ஐயப்ப பக்தர்களில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.கடந்த திங்களன்று (டிச.23) சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்ட... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வழக்கில் ஏன் முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? - அண்ணாமலை கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணை... மேலும் பார்க்க

49 ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு இணைந்த பெண்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் சிறுமியாக காணாமல்போன பெண் 49 ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.ஃபுல்மதி (எ) ஃபுலா தேவி, தற்போது 57 வயதாகும் இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு 8 வயத... மேலும் பார்க்க

அரிதான தலைவர்களுள் ஒருவர் மன்மோகன் சிங்: முதல்வர் ஸ்டாலின்

அரிதான தலைவர்களுள் ஒருவராக வரலாறு மன்மோகன் சிங் பெயரைப் பொறித்து வைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பி... மேலும் பார்க்க