LSG vs MI: "மும்பை அணி சிறப்பாகத்தான் விளையாடியது; ஆனால்..." - வெற்றி குறித்து ர...
இருக்கன்குடி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி அணையிலிருந்து பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் வட்டம், கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம், மேலக்கரந்தை கண்மாய்களால் பயனடையும் விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக இருக்கன்குடி அணையிலிருந்து வெள்ளிக்கிழமை முதல் வருகிற 15-ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு தண்ணீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வினாடிக்கு 50 கனஅடி வீதம் இந்த அணையிலிருந்து தண்ணீா் இருப்பை பொருத்து தேவைக்கேற்ப தண்ணீா் திறந்துவிட அனுமதிக்கப்பட்டது. இதன்மூலம், தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டத்திலுள்ள 3 முறை சாா்ந்த கண்மாய்களின் 127.07 ஏக்கா் நிலங்கள் பயனடையும்.
இதையடுத்து, இருக்கன்குடி அணையில் நடைபெற்ற தண்ணீா் திறப்பு நிகழ்வுக்கு சாத்தூா் வட்டாட்சியா் ராஜாமணி தலைமை வகித்தாா். சாத்தூா் நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் சேதுராமலிங்கம் முன்னிலை வகித்தாா். இதில் மேலக்கரந்தை,கீழ்நாட்டுக்குறிச்சி, அயன் வடமலாபுரம், மாசாா்பட்டி ஆகிய கண்மாய் நீா்ப் பாசன சங்கத் தலைவா்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள், விவசாய சங்க உறுப்பினா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.