செய்திகள் :

இருமல் மருந்து உயிரிழப்பு: தமிழக அரசு அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

post image

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகள் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.13) சோதனை நடத்தியிருக்கின்றனர்.

ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் இந்தியாவையே அதிரச்சியடையச் செய்தது. இந்த நிலையில், இருமல் மருந்து ஏற்றுமதி செய்ததில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் நடந்திருப்பதாக தகவல் வெளியானது.

கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்து நிறுவனம்
கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்து நிறுவனம்

இந்த நிலையில், ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம், அதன் உரிமையாளர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீட்டிற்கு நேற்று 2 வாகனங்களில் வந்த 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் முறையாக முன் அனுமதி வாங்காமல் பல்வேறு மாநிலங்களுக்கு ‘கோல்ட்ரிஃப்’ மருந்துகள் ஏற்றுமதி செய்ததற்கான ஆவணங்கள், நிறுவனத்தின் வங்கி கணக்கு விபரங்கள் என வழக்கு தொடர்பான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

அதேபோல், நேரில் சோதனை நடத்தாமல், மருந்து நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் தீபா ஜோசப் வீடு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

இந்த சோதனையில் ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவன வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகள் மீதும் லஞ்சம் பெற்றதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையின் இடையே கடந்த வியாழக்கிழமை கைது செய்து மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை நேற்று மருந்து தயாரித்த தொழிற்சாலைக்கு நேரில் அழைத்து வந்தது மத்தியப் பிரதேச காவல்துறை.

அங்கு ரங்கநாதன் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இந்த விசாரணை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 25 நாய்களுக்... மேலும் பார்க்க

`ஏடிஎம் இயந்திரத்தில் பல மடங்கு லாபம்'- பிரபலங்களை வைத்து `பலே' மோசடி; கோவையில் மீண்டும் அதிர்ச்சி!

கொங்கு மண்டலத்தில் நூதன முறையில் பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு ‘ZPE ATM’ எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் ஃபிரான்சைஸ் (Franchise) ம... மேலும் பார்க்க

Cyber Crime: பேஸ்புக் காதலி சொன்ன ஆசை வார்த்தை; 74 வயது முதியவர் ரூ. 3 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

மும்பையில் வசிக்கும் 74 வயது முதியவர் ஒருவர் ஃபேஸ்புக் காதலி சொன்ன ஆலோசனையைக் கேட்டு ரூ.3.7 கோடியை இழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 74 வயது முதியவருக்கு ஃபேஸ்புக் மூலம் திவ்யா சர்மா என்ற பெண்ணின் அறிம... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: போலி ஆபாச வீடியோவைக் காட்டி MLA-விடம் ரூ.10 லட்சம் பறிப்பு; விவசாயி கைதான பின்னணி என்ன?

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சிவாஜி பா... மேலும் பார்க்க

மதுரை: கஞ்சா போதையில் அட்டகாசம்; ஆயுதங்களுடன் கும்பல் வலம்; கார், பைக், கடைகளை உடைத்து ரகளை

மதுரை மாநகரப் பகுதியிலுள்ள வண்டியூர், சௌராஷ்டிராபுரத்தில் கடந்த 10 ஆம் தேதி இரவு கஞ்சா போதையில் கையில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற ரவுடிக் கும்பல் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது.க... மேலும் பார்க்க

விருதுநகர்: தீயணைப்புத் துறையினர் Gpay-ல் தீபாவளி வசூல்; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியது எப்படி?

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் தீபாவளி வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத் து... மேலும் பார்க்க