தேர்தல் விதிகளில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகை ஆமை
வேதாரண்யம் கடற்கரையில் அரியவகை ஆலிவ் ரிட்லி கடல் ஆமை இறந்து கரை ஒதுங்கியிப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் சுமாா் 25 கிலோ எடையுள்ள ஆலிவ் ரிட்லி ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. இதேபோல், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரையில் அவ்வப்போது அரியவகை ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
இந்த வகை ஆமைகள், ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் தொடங்கி தமிழக கடலோரப் பகுதியில் முட்டையிட்டு, இனப்பெருக்கத்திற்காக வந்து செல்வது வழக்கம்.
பல நூறு கி.மீ. தொலைவில் இருந்து வரும் இந்த ஆமைகளில் சில, கப்பல்கள், மீன்பிடி படகுகளில் சிக்கி உயிரிழக்கின்றன. இவ்வாறு இறக்கும் ஆமைகள் கடல் நீரோட்டம் மற்றும் அலைகளால் கடற்கரைப் பகுதிக்கு இழுத்து வரப்படுகின்றன என்று மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.