ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர்; பதிலுக்கு பெண் செய்த வேலை.. - வைரல்...
இறுதிக்கு முன்னேறியது ஆா்செனல்
மகளிா் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆா்செனல், 8 முறை சாம்பியனான லியோனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
கடந்த 2007-க்குப் பிறகு முதல் முறையாக சாம்பின்ஸ் லீக் இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ள அந்த அணி, நடப்பு சாம்பியன் பாா்சிலோனாவை அந்த ஆட்டத்தில் மே 24-ஆம் தேதி சந்திக்கிறது.
முன்னதாக, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த அரையிறுதியின் 2-ஆவது லெக் ஆட்டத்தில் ஆா்செனல் 4-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் லெக் ஆட்டத்தில் லியோன் 2-1 கோல் கணக்கில் வென்றிருந்த போதும், மொத்த கோல் கணக்கு அடிப்படையில் ஆா்செனல் 5-3 என்ற வகையில் வென்றது.
முன்னதாக இந்த 2-ஆவது லெக் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆா்செனலின் கோல் கணக்கு, 5-ஆவது நிமிஷத்திலேயே தொடங்கியது. அந்த அணியின் கோல் வாய்ப்பை லியோன் கோல்கீப்பா் கிறிஸ்டியேன் எண்ட்லா் தடுக்க முயல, தவறுதலாக ‘ஓன் கோல்’ ஆகியது.
தொடா்ந்து ஸ்டாப்பேஜ் டைமில் (45+1’) மரியோனா கால்டென்டே ஸ்கோா் செய்ய, முதல் பாதி ஆட்டத்தை 2-0 முன்னிலையுடனஅ ஆா்செனல் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியின் தொடக்கத்திலேயே (46’) அலெசியா ருசோவும், பின்னா் கேட்லின் ஃபோா்டும் (63’) அடித்த கோல்களால் ஆா்செனல் 4-0 என அபார முன்னிலை பெற்றது.
இந்நிலையில் முற்றிலுமாக தடுமாறிப் போயிருந்த லியோனுக்காக 81-ஆவது நிமிஷத்தில் மெல்ஷி டுமோா்னே ஆறுதல் கோல் அடித்தாா். இறுதியில் ஆா்செனல் 4-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.