செய்திகள் :

"இறைச்சி சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள்" -மராத்தியர் vs குஜராத்தியர் ஆக மாறிய தகராறு; பின்னணி என்ன?

post image

மும்பையில் அடிக்கடி மராத்தியர் மற்றும் குஜராத்தியர் இடையே சிறு சிறு தகராறு ஏற்படுவதுண்டு. குஜராத்தியர்கள் வசிக்கும் கட்டிடங்களில் மராத்தியர்களுக்கு வீடு விற்பனை செய்வது கிடையாது.

அப்படியே இரு தரப்பினரும் ஒரே கட்டிடத்தில் வசித்தாலும் மராத்தியர்கள் அசைவ உணவுகளைக் கட்டிடத்திற்குள் கொண்டு வரவோ அல்லது சமைக்கவோ குஜராத்தியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு.

இதற்காகவே மும்பையில் பில்டர்கள் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்காகத் தனியாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

அக்கட்டிடங்களில் மராத்தியர்களில் வீடு வாங்கச் சென்றால் விற்பனை செய்வது கிடையாது. வாடகைக்குக்கூடக் கொடுப்பது கிடையாது.

மும்பை கிழக்கு புறநகர்ப் பகுதியான காட்கோபரில் குஜராத்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே பல ஆண்டுகளாக இப்பகுதி பா.ஜ.க-வின் கோட்டையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், காட்கோபரில் உள்ள சாம்பவ் தர்சன் கட்டிடத்தில் வசிக்கும் ராம் ரிங்கே என்ற மராத்தியர், வீட்டில் அசைவ உணவு சமைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ராம் வீட்டிற்கு அருகில் குஜராத்தி ஒருவர் வசிக்கிறார். அந்த குஜராத்தியர் ராம் ரிங்கேயைப் பார்த்து, 'மீன், இறைச்சி சாப்பிடும் மராத்தியர்கள் அசுத்தமானவர்கள்' என்று தெரிவித்துள்ளார்.

உடனே ராம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நிலைமை மோசம் அடைந்ததால் ராம் உடனே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா பிரமுகரைத் தொடர்பு கொண்டு வரவழைத்தார்.

உடனே ராஜ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த நவநிர்மாண் சேனா தலைவர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு வந்து குஜராத்தியர்களை எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

மராத்தியர்களை மோசமாக நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், குஜராத்தியர்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாது என்றும் மிரட்டிவிட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்றவுடன் பொது வாட்ஸ்ஆப் குழுக்களில் இருந்து ராம் ரிங்கேயை நீக்க வேண்டும் என்று சில குஜராத்தியர்கள் கோரினர்.

இதையடுத்து நவநிர்மாண் சேனா தலைவர்கள் மீண்டும் வந்து, கட்டிடத்தின் தலைவர் ராஜ் பார்தேயை எச்சரித்து விட்டு சென்றனர்.

மராத்தியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எங்களது ஸ்டைலில் தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தனர்.

இது குறித்து நவநிர்மாண் சேனா தலைவர் ஒருவர் கூறுகையில், ''அவர்கள் மராத்தியர்களை அசுத்தமானவர்களாக நினைக்கின்றனர். அப்படி என்றால் மகாராஷ்டிராவும் அசுத்தமானது என்று நினைக்கின்றனர். அப்படிப்பட்ட அசுத்தமான பகுதிக்கு ஏன் வர வேண்டும்'' என்று கேள்வி எழுப்பினர்.

இந்த உணவு, இன மோதல் வாட்ஸ் ஆப்களில் வைரலானது. ஆனால் யாரும் போலிஸில் புகார் செய்யவில்லை. ஆனால் வாட்ஸ் ஆப் பதிவைப் பார்த்து இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராஜ் தாக்கரே

இது குறித்து போலீஸ் அதிகாரி அவினாஷ் கூறுகையில், ''குடியிருப்புத் தேர்தலில் போட்டியிட்டதில் இருந்து தன்னைச் சித்ரவதை செய்து வருவதாக ராம் தெரிவித்துள்ளார். இது குறித்து அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து அக்கட்டிடத்தில் வசிக்கும் சிலர் கூறுகையில், ''கட்டிடத்தில் உணவு சமைக்க எந்த வித கட்டுப்பாடும் கிடையாது'' என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜய் கூறுகையில், ''மும்பையில் மராத்தியர்களைக் குஜராத்தியர்கள் தொடர்ந்து துன்புறுத்துவதற்கு தேவேந்திர பட்னாவிஸ் அரசுதான் காரணமாகும்.

மகாராஷ்டிரா முதல்வரும் அசைவ உணவுகளை விரும்புகிறார். மொழி மற்றும் உணவு தொடர்பாக மகாராஷ்டிரா அரசு பின்பற்றும் கொள்கை மராத்தியர்கள் மற்றும் குஜராத்தியர்களைப் பிரிப்பது போன்று இருக்கிறது.

இது சரியல்ல. இப்போது மராத்தியர்கள் அரசிடம் கேள்வி கேட்க வேண்டும். மகாராஷ்டிரா மராத்தியர்களால் ஆளப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது'' என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த வார கேள்விகள்!

விவாதப்பொருளான உச்ச நீதிமன்றம் பயன்படுத்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, அடுத்த இந்திய தலைமை நீதிபதி, தொடங்கிய மீன்பிடித் தடைக்கலாம், ஐ.பி.எல், சூர்யாவின் ரெட்ரோ திரைப்பட டிரெய்லர் ரிலீஸ் எனப் பல நிக... மேலும் பார்க்க

மனித விந்தணுக்களுக்கு இடையே நடைபெறும் பந்தயம் - இந்த `Sperm Race’ எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா?

உலகில் முதன்முறையாக விந்தணுக்களுக்கு இடையே பந்தயம் நடைபெற உள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான ரேஸில் மனிதர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை, விந்தனுக்கள் தான் ஈடுபடுகின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்... மேலும் பார்க்க

”கைதிகளுடன் தனிமையில் இருக்கலாம்...” - சிறையில் திறக்கப்பட்ட ”பாலியல் அறை” - எங்கே தெரியுமா?

இத்தாலியில் சிறை கைதிகளுக்காக முதன்முதலில் "பாலியல் அறை" திறக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய உம்ப்ரியா பகுதியில் உள்ள சிறையில் திறக்கப்பட்ட இந்த பாலியல் அறையில் ஒரு கைதி தனது பெண் துணைவியுடன் தனிப்ப... மேலும் பார்க்க

`இது என் தாயார் விருப்பம்’ - 60 வயதில் கட்சி பெண் நிர்வாகியை மணந்த பாஜக மூத்த தலைவர்

மேற்கு வங்க மாநில முன்னாள் பா.ஜ.க தலைவராக இருப்பவர் திலிப் கோஷ். மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பா.ஜ.க-வை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்த பெருமை திலிப் கோஷிற்கு உண்டு. 60 வயதாகும் திலிப் கோஷ் தனது ச... மேலும் பார்க்க

`அவருடன்தான் வாழ்வேன்’ - கைகொடுக்காத 12 மணிநேர கவுன்சிலிங்; வருங்கால மருமகனுடன் சென்ற பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்தவர் சப்னா தேவி. இவரின் மகளுக்கு கடந்த 16ம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 8-ம் தேதி சப்னா தேவி தனது மகள் திருமணம் செய்ய இருந்த எதிர்... மேலும் பார்க்க